லாசா மற்றும் பிற திபெத் இனப் பிரதேசத்தில் நிகழ்ந்த கடுமையான வன்செயல்களை, கண்டித்ததோடு, திபெத் பரப்பிய புத்த மதம் கெட்ட செயல்களைத் தடுத்து, சிறந்த செயல்களைப் பாராட்டி, வன்முறையை நிராகரிக்கிறது என்று திபெத்தின் வாழும் புத்தர்கள் கூறியுள்ளனர்.
மார்சி 14ம் நாள், லாசாவில் நிகழ்ந்த வன்செயல்களில் துறவிகள் சிலர், புத்த மதத்தை இழிவுபடுத்திவதைக் கண்டு, தாம் கோபமும், வெட்கமும் அடைந்ததாக புத்த மதச் சங்கத்தின் திபெத் கிளையின் தலைவரும், வாழும் புத்தருமான Dupkang Tupden Kedup கூறினார்.
துறவிகள் புத்தத்தை உணர்வுபூர்வமாகப் படிக்க வேண்டும். சில துறவிகள், சட்டத்துக்குப் புறம்பாக கம்புகள், கற்கள் மற்றும் குத்து வாட்களை கொண்டு, மக்களைக் காயப்படுத்திக் கொன்றுள்ளனர். அவர்களுக்கு, கருணையும் அனுதாபம் கொண்ட மனமும் இல்லை என்று தற்போதைய ஒரே பெண் வாழும் புத்தரான Sangdang KorjePhakmo Dechen Chodron தெரிவித்தார்.
|