கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம், தனிச்சிறப்பு வாய்ந்த வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புத் துறைகளில் பொருளாதாரத்தைப் பெரிதும் வளர்த்து வருகிறது. உழைப்பாற்றல் ஏற்றுமதியை ஆக்கப்பூர்வமாக ஏற்பாடு செய்துள்ளது. தவிர, சிங்காய்-திபெத் இருப்புப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிக் கட்டுமானத் திட்டங்களின் அதிகரிப்பு, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானக் கட்டமைப்பையும் பெரிதும் முன்னேற்றியுள்ளது.
2007ம் ஆண்டு, திபெத்துக்குச் சென்ற பயணியர்களின் எண்ணிக்கை, 40 இலட்சத்து 20 ஆயிரத்தை எட்டியுள்ளது. சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் ஆயர்களின் எண்ணிக்கை, 34 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
திபெத்தின் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி வருமானம், தொடர்ந்து 5 ஆண்டுகளாக, 10 விழுக்காட்டு மேல் அதிகமாகி வருகிறது. அவர்களின் நுகர்வுக் கட்டமைப்பு, ஆடம்பர வசதிகளை அனுபவிக்கும் மாதிரியாக மாறியுள்ளது.
|