
சீனாவின் கிழக்குப் பகுதியின் கடற்கரை மாநகர் சாங்காயில், பொது பண்பாட்டுச் சேவையின் வடிவங்களைப் புத்தாக்குவதை அரசு முன்னேற்றி வருகிறது. புதிய பொது பண்பாட்டுச் சேவையின் மேடையை உருவாக்குவதன் மூலம், வசதி மற்றும் பயன் கொண்டு, தேவைகளுக்குப் பொருந்திய பண்பாட்டு நடவடிக்கைகள், பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

புதிய பொது பண்பாட்டுச் சேவையின் மேடை மூலம், பண்பாட்டு நடவடிக்கைகள், பல்வேறு விரிவுரைகள், இணையப் பயிற்சி உள்ளிட்ட இலவசச் சேவைகள், அரசால் சாங்காயின் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையை வகுத்த போது, குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று, மக்களின் தேவை மற்றும் கருத்துக்கள் அறிந்துகொள்ளப்பட்டன. தவிர, இணையம் மூலம் பொது மக்களின் கோரிக்கைகளை வெளியிட்டலாம். ஏலம் விடப்படுவதன் மூலம், எந்த குழுகளும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் அடி மட்ட நிலையில் சேவை செய்வது முடிவு செய்யப்பட்டுள்ளது. சாங்காய் அரசைச் சேர்ந்த ஒரு சமூகச் சேவை நிறுவனமான கீழை கல்விப் பரவல் சேவை மையத்தின் தலைவர் nibing செய்தியாளரிடம் எடுத்துக்கூறினார்.

2007ம் ஆண்டின் இறுதி வரை, nibingக்கு தலைமையின் இந்நிறுவனம், சாங்காய் மற்றும் yue நாடகம், பொம்மலாட்ட நாடகம் உள்ளிட்ட 40 வடிவங்களிலான ஏறகுறைய 1000 கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுள்ளன. 2 லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் அவைற்றைக் கண்டு களித்துள்ளனர். வேலையற்ற நேரத்தில், குடியிருப்புப் பகுதியின் கலை அரங்குகளில் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பது, மக்களின் பொழுது போக்கு முக்கிய வடிவமாக மாறியுள்ளது.

நண்பர்களே, சாங்காய் மாநகரத்தின் பண்பாட்டுச் சேவை என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|