• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-14 18:22:42    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான காற்று கட்டுப்பாட்டுப் பணிகள்

cri

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, பெய்சிங் காற்று தர பிரச்சினையில் சமூகத்தின் பல்வேறு வட்டாரங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது காற்று தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், பெய்சிங் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு முதல், ஹொப்பெய், சாங் சிய், சன் துங், உள் மங்கோலியா, தியன் சின் ஆகிய மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களுடன் இணைந்து, பெய்சிங் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயர் எரியாற்றல் செலவு மற்றும் உயர் மாசுபாட்டு தொழில் நிறுவனங்களை அகற்றியுள்ளது. அத்துடன், திட்டப்படி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் தற்காலிக நடவடிக்கைகளை அவை கூட்டாக நடைமுறைப்படுத்தும். இக்கூட்டு நடவடிக்கைகள் மூலம், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான காற்று தரம் உத்தரவாதத்தைப் பெறும் என்று சீனத் துணை சுற்றுசூழல் பாதுகாப்பு அமைச்சர் Zhang Lijun சுட்டிக்காட்டினார். அவர் கூறியதாவது:

தற்போது, ஒப்பீட்டளவில் முழுமையான காற்று மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு முறைமையை பெய்சிங் உருவாக்கியுள்ளது. காற்று தர நிலைமையைப் பன்முகங்களிலும், காலதாமதமின்றி, பிழையின்றி வெளிப்படுத்தும் வகையில், பெய்சிங் 4 வதை மாசுப் பொருட்களை நாள்தோறும் கண்காணிப்பதோடு, முக்கிய செய்தி ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. இது வரை, பெய்சிங்கின் கரியமில வாயு, கந்தக வாயு முதலிய முக்கிய மாசுப் பொருட்களின் வெளியேற்ற அளவு அடிப்படையாக வரையறையை எட்டியுள்ளது. கரியமில வாயு வெளியேற்றம் மிக வேகமாக குறைந்தது. பெய்சிங் காற்று தர வரையறையை எட்டிய எண்ணிக்கை 1998ம் ஆண்டில் இருந்த 100 நாட்களிலிருந்து 2007ம் ஆண்டில் 246 நாட்களாக உயர்த்தப்பட்டது என்றார் அவர்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீன அரசின் 3 வாக்குறுதிகளை வெகு விரைவில் நிறைவேற்றும் வகையில், சீனாவின் சுற்றுச்சூழலியல் நிபுணர்கள் நீண்டகால ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான காற்று தரத்தைப் பெய்சிங் சுற்றுப்புறப்பிரதேசங்களின் மாசுப் பொருட்கள் பாதிப்பதை ஆராய்ச்சியின் முடிவு காட்டியது. எனவே, குறிப்பிட்ட பிரதேசங்களில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, காற்று தரத்தை பன்நோக்கத்துடன் கட்டுப்படுத்த வேண்டும். விளைவாக பெய்சிங், ஹொப்பெய், சாங் சிய், சன் துங், உள் மங்கோலியா, தியன் சின் ஆகிய மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களும், சீனத் தேசிய சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையமும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் காற்று தரத்தை உத்தரவாதம் செய்வதற்கான நடவடிக்கைகளை கூட்டாக திட்டமிட்டுள்ளன என்று Zhang Lijun கூறினார். அவர் கூறியதாவது:

காப்புறுதி நடவடிக்கை, இரண்டு உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. முதலாவதாக, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முன், கட்டிடப் பொருட்கள், காரை, நிலக்கரி வேதியியல், இரும்புருக்கு முதலிய தொழில் நிறுவனங்களை 6 பிரதேசங்களும் நிர்வகித்து, தொழில் கட்டமைப்பு சீர்திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். இரண்டாவதாக, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, சில தொழில் நிறுவனங்களிடையில் கட்டுபாட்டு நடவடிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தற்போது, உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம், உடன்படிக்கையில் வகுக்கப்பட்ட கடமைகள் சிலவற்றை நிறைவேற்றியுள்ளது என்று உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் Su Qing கூறினார். அவர் கூறியதாவது:

இது வரை, 12 அனல் மின்னாக்கிகளின் கரி அகற்றும் கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது, 3 அனல் மின்னாக்கிகள் உயர்வேகமாக சீராக்கப்படுகின்றன. ஆனால், ஜூன் முதலாம் நாள் வரை, கரி அகற்றும் கடமையை நிறைவேற்றாவிட்டால். அவை மூடப்படும் என்றார் அவர்.

கூட்டு நடவடிக்கைகள் மூலம், கடந்த ஆண்டு இறுதி வரை, 6 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களின் கரி அகற்றும் கடமையில் 75 விழுக்காடு நிறைவேறியது. பல உயர் எரியாற்றல் செலவு மற்றும் உயர் மாசுபாட்டு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் மூலம், பெய்சிங் ஒலிம்பிக் விளயாட்டுப் போட்டிக்கான காற்று தரம் உத்தரவாதம் பெறலாம் என்று சீனத் துணை சுற்றுசூழல் பாதுகாப்பு அமைச்சர் Zhang Lijun தெரிவித்தார்.