• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-15 13:28:50    
ஃபா யுவான் கோயில்

cri

ஃபா யுவான் கோயில், பெய்ஜிங்கிலுள்ள சியுவான் வூ பிரதேசத்தின் ஃபா யுவான் கோயில் ஹோ ச்சியே என்ற வீதியிலும், சியுவான் வூ மென் வாயிலின் வெளிப்புறத்தில் சியௌ ச்சி குறுகிய சந்தின் தென் பகுதியில் கிழக்கிலும் உள்ளது. இதன் பரப்பளவு, சுமார் 6700 சதுர மீட்டராகும். இது, பெய்ஜிங்கில் மிக நீண்ட வரலாறு கொண்ட புகழ்பெற்ற கோயிலாகும்.

ஃபா யுவான் கோயில், தாங் வம்சக்காலத்தில் கட்டியைக்கப்பட்டது. முன்பு, அது, மின் ச்சோ கோயில் எனவும் ச்சோங் ஃபூ கோயில் எனவும் அழைக்கப்பட்டது. 1437ம் ஆண்டு, துறவி சியாங் ழோங், அதனைத் திருத்தி அமைத்தார். 1734ம் ஆண்டு, அதன் பெயர் ஃபா யுவான் கோயிலாக மாறியது. 1955ம் ஆண்டு, அது மீண்டும் சீரமைக்கப்பட்டது. இப்பொழுது, அதில் சீனாவின் புத்த மதவியல் கழகமும், புத்த மத நூலகமும் இருக்கின்றன.

அது, தெற்கு நோக்கியதாய் வடக்கில் அமைந்துள்ளது. 4 முற்றங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் முற்றத்தில், தியன் வாங் மண்டபம் இருக்கிறது. அங்கு, துணிப்பை துறுவி மற்றும் 4 தேவர்களின் வெண்கலச் சிலைகள் உள்ளன. இராண்டாவது முற்றத்தில், தா சியோங் மண்டபம் இருக்கிறது. இதிலுள்ள Sakyamuni உள்ளிட்ட 3 புத்தர்களின் சிலைகள் மிங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டன. மூன்றாவது முற்றத்தில், குவான் யின் கே இருக்கிறது. அங்கு, பண்டைய கால கற் செதுக்கல்கள் உள்ளன. அதன் பின்புறத்தில், Pi Lu கே இருக்கிறது. அங்கு மிங் வம்சக்கால 5 வெண்கல புத்தர் சிலைகள் இருக்கின்றன. அதன் பின், தா பேய் ஆலயம் காணப்படுகிறது. அங்கு, தாங் முதலிய 5 சமகாலத்த மதமறைகள் வைக்கப்பட்டன. நான்காம் முற்றத்தில், கிழக்கு ஹான், கிழக்கு வூ, வடக்கு வெய், வடக்கு ச்சி, சுய்தாங் முதலிய வம்சகாலங்களின் கற் செதுக்கல் சிலைகள் இருக்கின்றன. அங்குள்ள மிங் வம்சக்கால மரத்தால் செதுக்கப்பட்ட புத்தர் சிற்பத்தின் நீளம், 10 மீட்டராகும். அது, பெய்ஜிங்கில் மிகப் பெரிய உறங்கும் புத்தர் சிற்பமாகும். ஃபா யுவான் கோயில், தீச் சீற்றம், நிலநடுக்கம், போர் முதலியவற்றால் சீர்குலைக்கப்பட்டது. பல முறை சீரமைக்கப்பட்டது.

நவ சீனா நிறுவப்பட்ட பின், அதனைச் சீரமைக்க, அரசு சிறப்பு நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது. தவிர, அங்கு, சீனாவின் புத்த மதவியல் கழகம் மற்றும் புத்த மத நூலகத்தைக் கட்டியமைத்துள்ளது. அது, பெய்ஜிங் மாநகரின் முக்கிய தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவாக உள்ளது.

1963ம் ஆண்டு, ஆசியாவின் 11 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் புத்த மதக் கூட்டம் இதில் துவங்கியது. 1980ம் ஆண்டு, சியான்ச்சேன் துறவியின் சிலை, அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டது. இது, பெய்ஜிங் புத்த மதத் துறுவிகள் மத நடவடிக்கை மேற்கொள்ளும் முக்கிய இடமாகும். தற்போது, நாட்டு முக்கிய புத்த மதக் கோயிலாகும்.