2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஆதரிப்பதாக அண்மையில் சில நாடுகளின் அரசியல் வட்டாரத்தினர்கள் தமது உரைகளில் தெரிவித்தனர்.
சியோலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், ஒலிம்பிக் எழுச்சியைப் பரப்பும் ஒரு வாய்ப்பாக மாறும் என்று தென் கொரிய தலைமையமைச்சர் Han Seung-soo நேற்று கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அரசியல் கருவியாக மாற்ற கூடாது. ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பது தவறானது என்று 13ம் நாள் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கும் போது, ஸ்விட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் ஸ்விட்சர்லாந்து-சீன உறவு பற்றிய குழுவின் தலைமைச் செயலாளரும், முன்னாள் தேசிய பேரவையின் உறுப்பினருமான Pierre Kohler கூறினார். இலண்டன் மற்றும் பாரிஸில் நிகழ்ந்த, ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தைச் சீர்குலைக்க முயன்ற செயல்களை உறுதியாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஆதரிப்பது என்று கினிய வெளியுறவு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் Cisseஉம், தென் ஆப்பிரிக்காவின் Cape Townஇல் பன்னாட்டு நாடாளுமன்ற ஒன்றியத்தின் 118வது மாநாட்டில் கலந்து கொண்டுள்ள கசகஸ்தான், ரஷியா, கிரேக்கம், எகிப்து, பபுவா நியு கினி முதலிய நாடுகளைச் சேர்ந்த சில பிரதிநிதிகளும், அண்மையில் தெரிவித்தனர்.
|