• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-15 15:10:10    
சீனாவின் புதிய கல்வி உதவி கொள்கை

cri
செப்டெம்பர் முதல், சீனாவின் புதிய கல்வி ஆண்டு துவங்கியது. இவ்வாண்டு 56 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். அவர்களில் 10 இலட்சத்துக்கு அதிகமானோர் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்ளாவர். புதிய கல்வி ஆண்டில், கல்வி உதவித் தொகையை அரசு அதிகரித்துள்ளது. இதனால், பல வறிய மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கல்விக் கட்டணம் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை.

17 வயதுடைய xu chen xi, மேற்கு சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் qu மாவட்டத்தில் சூ சான் எனும் ஒரு சிற்றூரில் வசிக்கின்றார். அண்மையில், மிக கடுமையான வெள்ளப்பெருக்கு இங்கே ஏற்பட்டது. சம்பவத்தில், xu chen xi குடும்பத்தின் வீடு நாசமடைந்து வீழ்ந்தது. வீட்டிலுள்ள தானியமும் வெள்ளப்பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்டது. இந்த வறிய குடும்பத்தின் வாழ்க்கை மேலும் சிக்கலாகியது. xu chen xiக்கு பல்கலைக்கழகக் கல்விக் கட்டணத்தை ஏற்பாடு செய்வது வீட்டின் முதன்மை பிரச்சினையாகிவிட்டது.

தற்போது, சீனாவி்ன் சாதாரண பல்கலைக்கழகங்களில் கட்டாயமற்ற கல்வி அமைப்புமுறை நடைமுறையிலுள்ளது. கல்வி, விடுதி, வாழ்க்கை முதலியவற்றில் ஒரு பல்கலைக்கழக மாணவர் ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் யுவான் செலவிட வேணடும். இத்தொகை, வறிய குடும்பங்களுக்குக் குறிப்பாக வறிய கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு கடுமையான சுமையாகும்.

ஆனால், xu chen xi குடும்பம் கவலைப்பட்ட இப்பிரச்சினை விரைவாகத் தீர்க்கப்பட்டது. உள்ளூர் பொது துறை மற்றும் கல்வி துறையின் பணியாளர்கள் அவர்களுக்கு 6000 யுவான் கல்வி உதவித் தொகை வழங்கியதோடு, நாட்டின் புதிய கல்வி உதவி கொள்கையை அவர்களிடம் விவரமாக விளக்கி கூறினர். சி ச்சுவான் qu மாவட்டத்தின் கல்வி பணியகத்தின் தலைவர் xing chang hong கூறியதாவது,

பல புதிய கல்வி உதவி கொள்கைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஒருபுறம், நாட்டின் புலமைப் பரிசு. ஆண்டுக்கு ஒவ்வொருக்கும் 5000 யுவான் கிடைக்கலாம். மறுபுறம், தேசிய உதவித் தொகை. இது வறிய மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது. தவிர, மாணவர்கள் ஓய்வு நேரத்தில் செய்யும் வேலை மூலம் பெறும் வருமானத்தை கல்விக் கட்டணத்துக்குப் பயன்படுத்தலாம். கல்வி பெறுவதற்கென விண்ணப்பித்து வங்கிகளிலிருந்து கடன் வாங்கலாம் என்றார் அவர்.

ஆனால், சீனாவில் ஒரு கோடியே 70 இலட்சத்துக்கு அதிகமான பல்கலைக்கழக மாணவர்களில் சுமார் 20 விழுக்காட்டினர் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். ஆகையால், அவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித் தொகையை வழங்குவதென்பது கடினமான ஒன்றாகும். முன்பு, பலர் பொருளாதார இன்னல் என்ற காரணத்தால், கல்வியை நிறைவேற்ற முடியவில்லை. இப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், இவ்வாண்டின் புதிய கல்வி ஆண்டு துவங்கியது முதல், வறிய மாணவர்களுக்கான உதவித் தொகையை அரசு பெரிதும் அதிகரித்துள்ளது. சீன நிதி அமைச்சின் கல்விப் பிரிவின் தலைவர் zhao lu கூறியதாவது.

இந்த கல்வி ஆண்டில், மைய மற்றும் உள்ளூர் அரசுகள் புதிய கல்வி உதவிக் கொள்கைக்கு 1540 கோடி யுவானை ஒதுக்கியுள்ளன. முன்பு, கல்வி உதவி துறையில் மத்திய நிதியும் ஆண்டுக்கு 180 யுவான் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. உதவித் தொகையை பெரிதும் அதிகரிப்பதுடன், உதவித் தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றார் அவர்.

ஒரு மாணவருக்கான சீன அரசின் ஆண்டு கல்வி உதவித் தொகை முந்திய 1500 யுவானிலிருந்து தற்போதைய 2000 யுவானாக அதிகரித்துள்ளது. உதவித் தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 34 இலட்சத்தை எட்டி,முன்பை விட 7 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பண்பு நலன்களிலும் கல்வியிலும் சிறந்து விளங்கும் சுமார் 5 இலட்சம் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா 5000 யுவான் மதிப்புள்ள தேசிய புலமைப் பரிசு கிடைக்கலாம். இத்தகைய புதிய சலுகை, xu chen xi போன்ற வறிய மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தந்துள்ளது. xu chen xi கூறியதாவது

கல்வி கட்டணம் பற்றி இனியும் கவலைப்படத் தேவையில்லை. புலமைப் பரிசு பெற பல்கலைக்கழகத்தில் பயிலும் போது, நான் மேலும் முயற்சியுடன் கற்க வேண்டும் என்றார் அவர்.

அதேவேளையில், பல்வேறு இடங்களின் பல்கலைக்கழகங்களும் வறிய மாணவர்களுக்கு வசதி அளிக்க உணர்வுபூர்வமாக ஏற்பாடு செய்கின்றன. எடுத்துக்காட்டாக, சி ச்சுவான் பல்கலைக்கழகம் குடும்ப நிலைமை களவாய்வுப் படிவம் தேசிய நிலை கல்வி உதவிக் கடன் முதலிய 7,8 வகை தகவல்களைத் திரட்டி, பல்கலைக்கழக நுழைவு சான்றுடன் மாணவர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது. வறிய மாணவர்கள் கல்வி வாய்ப்பை பெறாமல் இருப்பதை தவிர்க்கும் பொருட்டு, ஒரு தொகுதி பணி அமைப்புமுறையை அமைத்துள்ளது என்று சி ச்சுவான் பல்கலைக்கழகத்தின் மாணவர் அலுவல் பிரிவின் துணை தலைவர் li shuan qiu கூறினார். இந்த அமைப்புமுறை பற்றி அவர் கூறியதாவது

முதலில், கொள்கை பற்றிய விளம்பரம். மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு முன், நாட்டின் கொள்கையை அவர்களுக்கு நன்றாக புரியச் செய்கின்றோம். 2வது, பல்கலைக்கழகத்தில் சேரும் போது, அவர்களுக்கு வசதி அளிக்கின்றோம். 3வது, மாணவர்களின் குடும்பப் பொருளாதார நிலைமையை அறிந்து உறுதிப்படுத்தி, பதிவு செய்கின்றோம். இது முழுமையான உதவிப் பணியின் அடிப்படையாகும் என்றார் அவர்.

வறுமை என்ற காரணத்தால், மாணவர்கள் உரிய நேரத்தில் கல்விக் கட்டணத்தை முழுமையாக அல்லது பகுதியாகக் கொடுக்க முடியாத நிலையில், தாமதமாகக் கொடுப்பதற்கு பல்கலைக்கழகம் அனுமதி வழங்குகின்றது. மாணவர்களின் நுழைவுப் பதிவு அல்லது விடுதியில் தங்குதலுக்கு சிக்கல் ஏற்படுத்தப்படாது. தற்போது, சீனாவில் மிக பெரும்பான்மை பல்கலைக்கழகங்களில் வறிய மாணவர்களுக்கான இத்தகைய பசுமை பாதை திறக்கப்பட்டுள்ளன.

மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹு நான் பல்கலைக்கழகம், வங்கிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து, அனைத்து வறிய மாணவர்களும் கல்வி உதவி கடன் பெற இயன்ற அளவில் உதவி செய்கின்றது. இதுவரை, கடன் தொகை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8000த்தைத் தாண்டியுள்ளது.

இது மட்டுமல்ல, சீனக் கல்வி துணை அமைச்சகம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்தது. அடுத்த சில ஆண்டுகளில், வறிய மாணவர்களுக்கான ஆண்டு கல்வி உதவித் தொகை 5000 கோடி யுவானைத் தாண்டக் கூடும். அப்போது, சீனாவில் ஆண்டுதோறும் சுமார் 40 இலட்சம் வறிய மாணவர்கள் இந்த சலுகை கொள்கையால் நலன் பெறுவர் என்பதே அந்த மகிழ்ச்சியான செய்தி.