க்ளீட்டஸ் -- இன்று நாம் ஒரு இனிப்பான சீன உணவு வகை பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். வாணி -- ஆமாம். இனிப்பான உணவு வகைகளை விரும்பும் நீங்கள் இந்த எளிதான உணவு வகையை வீட்டில் தயாரிக்கலாம். அதிக பழ வகைகள், பால் முதலியவை இடம்பெறும் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். க்ளீட்டஸ் -- இது மட்டுமல்ல, இந்த உணவு வகையில் தேனும் இடம்பெறும். இது உடலுக்கு மிகவும் நல்லது. வாணி -- நீங்கள் சொன்னது சரி. தேன் இனிப்பான சுவை உள்ளது. இது மட்டுமல்ல, வசந்த காலத்திலும், குளிர்காலத்திலும், இலையுதிர்காலத்திலும் இதை அதிகமாக உட்கொண்டால், உடம்பில் வறட்சித்தன்மையை தவிர்க்கலாம். க்ளீட்டஸ் -- இன்று அறிமுகப்படுத்தப்படும் உணவு வகையின் பெயர் என்ன? வாணி -- புல்வெளி பால் சூப்பு. இது சீனாவின் ஆன் ஹுய் மாநிலத்தின் உணவு வகையாகும். க்ளீட்டஸ் -- ஓ. வாணி, இதற்கு தேவையான பொருட்களை தெரிவிக்கவும். வாணி -- சரி, பால் அரை லிட்டர் மக்காச்சோளம் சிறிதளவு புல்லரிசி சிறிதளவு திராட்சை, பப்பாளிப் பழம், ஆரஞ்சுப்பழம் முதலிய பழவகைகள் சர்க்கரை போதிய அளவு தேன் சிறிதளவு கோதுமை மாவுஸ்டாச் சிறிதளவு
வாணி-- முதலில், நீங்கள் பல்வகை பழங்களை பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். க்ளீட்டஸ் -- வாணலியில் பாலை ஊற்றி. சர்க்கரையை சேர்த்து, நன்றாக கலக்க வேண்டும். வாணி -- பிறகு, மக்காச்சோளத்தை இதில் கொட்டலாம். வாணலியை அடுப்பின் மீது வைத்து, மிதமான சூட்டில் வேகவிடுங்கள். மெதுவாக மாவை இதில் கொட்டலாம். இந்தப் போக்கில், இடைவிடாமல் சூப்பை கலக்க வேண்டும். க்ளீட்டஸ் -- சில நிமிடங்களுக்குப் பின், வாணலியை அடுப்பிலிருந்து வெளியே எடுக்கலாம். பால் சூப்பில் பழத் துண்டுகளை கொட்டலாம். இவற்றுக்கு அருகில் புல்லரிசியை கொட்டவும். சூப்பின் மீது தேனை ஊற்றலாம். வாணி -- நேயர்களே, தற்போது இன்றைய இனிப்பான புல்வெளி பால் சூப்பு தயார். க்ளீட்டஸ் -- ரொம்ப எளிதான செய்முறை, அல்லவா? வாணி -- மேலும் சில குறிப்புகளை தெரிவிக்க விரும்புகின்றேன். க்ளீட்டஸ் -- சொல்லுங்கள். வாணி -- முதலில், மிதமான சூடு தேவை. தவிர, வாணலியிலுள்ள பால் தீய்ந்து போகாம் மாறாமல் தவிர்க்கும் வகையில், இதை வாணலியில் ஊற்றுவதற்கு முன், வாணலியில் கொஞ்சம் நீரை சேர்க்கலாம். இரண்டாவது, பாலில் சிறிதளவு சர்க்கரை போதும், அதிகமான சர்க்கரை பாலின் இயற்கை சுவையை பாதிக்கும். மேலும், அதிகமான சர்க்கரை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவுக்கும். க்ளீட்டஸ் -- சரி, நேயர்களே, இன்றைய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சீன உணவு வகையின் தயாரிப்பு முறை மிகவும் எளிதானது. இதற்கு தேவையான பொருட்கள் அனைத்துடம், தமிழகத்தில் கிடைக்கலாம். இந்த புல்வெளி பால் சூப்பை வீட்டில் தயாரிக்கலாம். சுவையானது.
|