• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-15 09:31:45    
நிகழ்ச்சிகளை கேட்டு தெரிவித்த கருத்துக்களை படியுங்கள்

cri

 கலை:  எமது நிகழ்ச்சிகளின் மீளாய்வாக அமையும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தவறாமல் நிகழ்ச்சிகளை கேட்டு கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பி எமக்கு உற்சாகமூட்டி வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, இன்றைய நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.

க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை கே. ராஜிபதி எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வருகிறோம். அதன் மூலம் சீன மொழியையும் கற்று வருகிறோம். உங்களின் இனிமையான நிகழ்ச்சிகளை கேட்கும்போது, சீன நாட்டிற்கு நேரில் வந்து காணவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது.
கலை: அடுத்து மலர்ச்சோலை நிகழ்ச்சி குறித்து சேந்தமங்கலம் எம். சிவானந்தம் எழுதிய கடிதம். நிகழ்ச்சியில் இசையின் மகிமையை அறிந்து கொள்ளும் படியாக கோமா எனும் நினைவிழந்த நிலையில் இருந்த ஒருவரை நாள்தோறும் இசையை கேட்கச்செய்து குணப்படுத்தியது குறித்த தகவல் கேட்டோம். இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. மேலும் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டயனோசரின் எஞ்சிய உடல் பகுதி கண்டறியப்பட்டது பற்றிய தகவலை கேட்டபோது வியப்பாக இருந்தது.

க்ளீட்டஸ்: தொடர்ந்து பாலூர் அமிர்தகடேசன் எழுதிய கடிதம். சீனாவின் மேன்மையை வெளியுலகுக்குக் கொண்டு வரும் நிகழ்ச்சி சீன வரலாற்றுச் சுவடுகள். மனிதனின் காலடி அவன் கடந்து வந்த சாதனையை காட்டும். அது போன்று நாட்டின் வளர்ச்சிப் பாதையே அதன் வலிமையை காட்டும். எடுத்த அடி சீராக வைக்காத குழந்தை விழும். அதுபோல நாட்டின் சீரான வளர்ச்சியே அதன் முன்னேற்றத்தை காட்டும். சீனாவின் முன்னேற்றத்தை, அதன் அடிச்சுவட்டை வரலாற்று தகவலாக கூறுவதை விரும்பிக் கேட்டு வருகிறேன்.
கலை: அடுத்து பாண்டிச்சேரி பெரியகாலாப்பட்டு பி. சந்திரசேகரன் சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீனாவின் தென்மேற்கு பகுதி யுன்னான் மாநிலத்தின் ஜிஷான் மலை, துன்ஷி ஏரி ஆகியவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கூறினீர்கள். தாய்நாட்டையும், மண்ணையும் நேசித்து வரும் சுவான் அவர்களின் நாட்டுப்பற்று துன்ஷி ஏரியை மாசுபாட்டிலிருந்து காப்பாற்றி வருகிறது என்பதை நினைத்து மிகவும் பெருமைகொள்கிறேன். இவரை போல இன்னும் பலர் உருவாக வேண்டும்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து இலங்கை காத்தான்குடி ஏ. ஏ. அப்துன் நதிஃபா எழுதிய கடிதம். சீன வானொலியை கேட்பதன் மூலம் சீன நாட்டின் நிலவரங்களையும், பிற நாடுகளின் தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் நடைபெற்று, வான் முட்டும் புகழ் பெற வாழ்த்துகிறேன்.

கலை: அடுத்து சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி பற்றி கருக்கம்பாளையம் என். பசுபதி வெங்கடேஸ்வரன் எழுதிய கடிதம். வைட்டமின் ஏ சத்து கொண்ட பச்சைப் பட்டாணியும் சிவப்பு முள்ளங்கியும் கலந்த சீன உணவு வகை ஒன்றை நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினீர்கள்.
கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு அதிக கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய வேலை செய்வோர் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். தங்கத்தொழில் உள்ளிட்ட நுண்ணிய வேலைப்பாடுகள் செய்பவர்களுக்கும் வைட்டமின் ஏ நிறைய தேவை.
க்ளீட்டஸ்: அடுத்து ஊட்டி எஸ். கே. சுரேந்திரன் எழுதிய கடிதம். சீன மகளிர் நிகழ்ச்சியில் 17 வயதான குங் மிய என்ற இளம்பெண் பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்கான உபசரிப்பு பெண்ணாக மாற விரும்புவதை பற்றி அறிந்தேன். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம் கொடுக்கும்போது அங்கே தான் உபசரிப்புப் பெண்ணாக இருக்கவேண்டும் என்ற அவரது கனவும், அதற்காக அவர் மேற்கொண்ட பயிற்சியும் குறித்து அறிந்து கொண்டேன். அவரது கனவும், விருப்பமும் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.


மின்னஞ்சல் பகுதி
…… யாழ்ப்பாணம் ஈசன்......
"கேள்வியும் பதிலும்" நிகழ்ச்சியில் சீன விமானத்துறை பற்றிய கலந்துரையாடலை கேட்டேன். சீன விமானத் தயாரிப்புக்கள் மற்றும் பயணியர் விமானசேவை பற்றி சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டது.
1919 ஆம் அண்டு சீனரால் தயாரிக்கப்பட்ட விமானம் வானத்தில் பறந்து சாதனை படைத்தது. சீனாவில் 134 விமான நிலையங்கள் உள்ளன. சர்வதேச அளவிலான விமான நிலையங்கள், புகழ்பெற்ற இடங்களில் உள்ளன. Beijing மாநகரம் உட்பட 3 இடங்களில் உலக தரத்திலான விமானநிலையங்கள் உள்ளன. சீனாவில் சுமார் 6 கோடி பயணிகள் விமானநிலையங்களைப் பயன்படுத்துகின்றனர் என்று அறிந்துகொண்டேன்.


......வளவனூர் முத்துசிவக்குமரன்...... கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று எல்லா நிலையிலும் திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி தான். இது வரலாற்று உண்மை மட்டுமல்ல, இனம் சார்ந்த ஒற்றுமையும் தான். இன்று பல கோடியாய் உள்ள சீனர்கள் ஒரு தாய் மக்கள் தான் என்பதை தலாய்லாமாக்கள் மறந்தாலும், திபெத்தியர்கள் மறக்க மாட்டார்கள். திபெத்தியர்கள் மனதில் நல்ல விடயங்களை விதைக்காவிட்டாலும் பரவாயில்லை, நஞ்சினை நடக்கூடாது. இதனை தலாய்லாமா புரிந்து கொள்ள வேண்டும். ஒலிம்பிக் விளையாட்டு, அரசியல் அரங்கு அல்ல என்பதும சரியான கூற்றாகும். சில நாடுகள் ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவது ஒலிம்பிக் விளையாட்டையே அவமானப் படுத்துவது போலாகும். அரசியலை புறந்தள்ளி விட்டு, இந்த மக்கள் ஒலிம்பிக் விளையாட்டினை, மாபெரும் வெற்றி முரசு கொட்டும் வரலாற்று நிகழ்வாக்க வேண்டும்.


…..திமிரி எஸ். அபிராமி……
தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற உரையாடலைக் கேட்டேன். இந்த பகுதியின் தமிழ் சீன உரையாடல் நிகழ்ச்சி, பல நேயர்களுக்கு மிகவும் பயன் மிக்கதாய் இருந்திருக்கும். சீனா வர விரும்பும் பயணிகளுக்கும், நேயர்களுக்கும் விமான நிலையத்தில் எப்படி சீன மொழியில் பதில் கூற வேண்டும் என்ற விளக்கப்பாடம் மிக மிக அருமை! ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இந்தச்சூழலில் பெய்ஜிங் வருபவர்களுக்கு உகந்த பாடமாய் இந்த நிகழ்ச்சி இருந்தது என்பதே உண்மை.


.....வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்....
ஏப்ரல் திங்கள் 6 ஆம் நாள் ஒலிபரப்பான •நேயர் விருப்பம்• நிகழ்ச்சியைக் கேட்டேன். இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஐந்து பாடல்களுமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் ஆகும். அனைத்து நிகழ்ச்சிகளிலுமே எனக்கு பிடிக்காத ஒரு சில பாடல்கள் இடம்பெறும். ஆனால், எல்லாப் பாடல்களும் பிடித்தவாறு நேயர் விருப்பம் நிகழ்ச்சி ஒலிபரப்பானது இன்றுதான். சிறந்த பாடல்களை விரும்பிக் கேட்ட நேயர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


……மதுரை-20 ஆர்.ராஜ்குமார்……
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாந்துக் மாநிலத்தின் ச்சினான் நகரில் மல்லிகை என்னும் தென்னிந்திய உணவகம் ஒன்று இயங்கி வருகிறது என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன்.
இங்கு இந்திய உணவுகளை அனுபவிக்கின்ற விருந்தினர்கள் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமைக்கு மதிப்பு அளித்து எந்நாட்டவரையும் வரவேற்கின்ற சீன அரசின் மனப்பாங்கு பெரிதும் பாராட்டுக்குரியது.
….திருப்பூர் இரா.சின்ன‌ப்ப‌ன்…. சீனக்கதை நிகழ்ச்சியில், நட்புக்கு உருவமில்லை என்ற கருத்தை வலியுறுத்தும் "சீஹாங்கும் தலையில்லாத ஆவியும்" "குறும்புத்தனமான ஆவிகள்" ஆகிய கதைகள் கேட்டேன். தற்போது தொடர்ந்து ஆவிகள் பற்றிய கதைகள் கேட்பதால் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்வதற்குப் பயமாக உள்ளது.