• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-15 19:00:42    
பெய்ஜிங் ஒலிம்பிக் காற்று தரத்திற்கான முயற்சி

cri

ஆகஸ்ட் திங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது அதற்குத் தேவையான காற்று தரத்தை உத்தரவாதம் செய்யும் வகையில் பெய்ஜிங் மாநகரும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களும் கூட்டாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக பெய்ஜிங்கிற்கு மணல் காற்றால் பாதிப்பு ஏற்படுத்தும் முக்கிய இடங்களில் ஒன்றான உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேச அரசு அரசாங்கத்தின் கோரிக்கையின் படி உயர் எரியாற்றல் செலவுல மற்றும் கடும் மாசுபாடு கொண்ட தொழில் நிறுவனங்களை தடுத்துள்ளதோடு மணல் தடுப்பு மற்றும் கட்டுபாடு அளவை வலுப்படுத்தியுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான காற்று தரத்தை உத்தரவாதம் செய்வதற்கு அது சிறந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக பாலைவனமயமாக்கம் மணற்பாங்கான நிலம் ஆகியவற்றை கட்டுபடுத்துவதற்கு ஆயிரம் கோடி யுவான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான நிலபரப்பு ஒரு கோடியே 60 இலட்சம் ஹெக்டரைத் தாண்டியுள்ளது. 2007ம் ஆண்டின் இறுதி வரை தன்னாட்சி பிரதேசத்தின் வனப் பரப்பு 2 கோடி ஹெக்டரை தாண்டியது என்று உள் மங்கோலிய வனத் தொழில் ஆணையத்தின் துணைத் தலைவர் லீ சு பிங் விவரித்தார். இது பற்றி அவர் கூறியதாவது கடந்த சில ஆண்டுகளில் மணற்பாங்கான நில தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணி கணிசமான சாதனைகளைக் கண்டுள்ளது. நிலம் மண்ணாகுவதை கட்டுப்படுத்துவதில் மாபெரும் முன்னேற்றமடைந்துள்ளது. கண்காணிப்பு புள்ளிவிபரங்களின் படி, முழு உள் மங்கோலியாவில் பாலை வனமயமாக்க நிலபரப்பு 1999ம் ஆண்டில் இருந்ததை விட 16 லட்சம் ஹெக்டர் குறைந்தது. பாலைவனமயமாக்க பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பு வடிவம் இடமாறியதிலிருந்து குறிப்பிட்டத்திலான வளர்ப்பு வடிவமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் விளைவாக வேளாண் மற்றும் கால்நடைவளர்ப்பு உற்பத்தி பயன் உயரந்துள்ளது என்று அவர் கூறினார்.

தன்னாட்சி பிரதேசத்தின் மணற்பாங்கான நில கட்டுப்பாட்டு பணி தவிர, பெய்ஜிங்கை ஒட்டியுள்ள குன்சன்டாக் மண் பிரதேசத்தை குறிப்பாக கட்டுபடுத்த தன்னாட்சி பிரதேசம் முயற்சித்துள்ளது. கட்டுபாட்டின் மூலம் பெய்ஜிங்கிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவு வரை இந்த மண் பிரதேசத்தில் உயிரின சுற்று சூழல் பெரிதும் மேம்பட்டுள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது கடந்த சில ஆண்டுகளில் குன்சன்டாக் மணற்பாங்கான நிலக் கட்டுப்பாட்டில் பெரும் சாதனைகள் காணப்பட்டுள்ளன. மணற்பாங்கான பிரதேசத்தின் தென் விளிம்பில் 400 கிலோமீட்டர் நீளமும் ஒன்று கிலோமீட்டல் முதல் 10 கிலோமீட்டர் வரையான அகலமும் கொண்ட இடத்தில் செடிகள் புற்கள் வளரும் வனக் காப்புப் பிரதேசம் அடிப்படையில் உருவாகியுள்ளது என்று அவர் கூறினார்.

இப்பிரதேசத்தின் தோலன் மாவட்டத்தில் வாழ்கின்ற ஆயர் சியா யி சியான் என்பவர் மணற்பாங்கான நில கட்டுப்பாட்டில் முன்மாதிரியாளராக அழைக்கபடுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் 300 ஹெக்டர் பரப்பில் மரங்கள் நட்டார். பெய்ஜிங்கிற்கு தூய்மையான வான்வெளியை உருவாக்குவதற்கு பாடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது  குன்சன்டாக் மணற்பாங்கான பிரதேசத்திலுள்ள உயிரின சூழல் நிலை 20 ஆண்டுகளுக்கு முந்திய நிலைக்கு திரும்பியுள்ளது. மிக அழகாக உள்ளது. வனத்தை கண்டவுடன் என் உள்ளம் மகிழ்கிறது. எனக்கு 4 மகன்கள் உண்டு. நான் வயதான பின் அவர்கள் என் மரம் நடும் இலட்சியத்தை தொடர்வார்கள். பொது மக்களுக்குத் தலைமை தாங்கி மரம் நடுவேன் என்று அவர் கூறினார். மணற்பாங்கான நில கட்டுப்பாட்டுப் போக்கில் உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேச அரசு சுற்று சூழல் மோசமாக இருக்கும் பிரதேசத்தில் வாழ்கின்ற விவசாயிகளையும் ஆயர்களையும் வேறு இடத்திற்கு குடியேற்ற முயற்சித்துள்ளது. அதேவேளையில் சேவை துறையை வாழ்க்கையின் வழிமுறையாக மாற்ற அரசு விவசாயிகளுக்கும் ஆயர்களுக்கும் ஊக்கமளித்துள்ளது. மணற்பாங்கான நில கட்டுப்பாட்டு முயற்சி பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான காற்று தரத்தை உத்தரவாதம் செய்வதற்கு சிறந்த சூழ்நிலையை உருவாக்குவது மட்டுமல்ல அங்குள்ள விவசாயிகளுக்கும் ஆயர்களுக்கும் உண்மையான நலனை கொண்டு வந்துள்ளது. இந்த முயற்சி அவர்களால் உணமார வரவேற்கப்பட்டுள்ளது.