• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-15 09:15:32    
நாசமாக்கப்பட்ட கடைகள்

cri

லாசாவிலான மார்ச் 14 வன்முறைச் சம்பவங்களில் நாசமாக்கப்பட்ட கடைகள் பல ஆபாச இடங்களாகும் என்று தலாய் லாமா அண்மையில் பேட்டி அளிக்கையில் கூறினார். ஆனால், புள்ளிவிபரங்களின் படி, சட்டபூர்வமற்ற தொழில்களில் ஈடுபடும் கடைகள் ஏதும் காணப்படவில்லை என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வணிக மற்றும் தொழிற்துறை ஆணையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட கடைகளின் மொத்த எண்ணிக்கை 1367ஆகும். அவற்றில் ஹான் இனம் மற்றும் திபெத் இனத்தினரது கடைகளின் எண்ணிக்கை முறையே 900 மற்றும் 90க்கு அதிகமாகும். தவிர, 270க்கு மேலான ஹுய் இனத்தோரின் கடைகளும் இருந்தன. உற்பத்தி தொழில் துறை, மொத்த மற்றும் சில்லறை விற்பனை வணிகம், உணவுத் துறை, பண்பாட்டு மற்றும் விளையாட்டுப் பொருள் தொழில், மருத்துவ மற்றும் சுகாதாரத் தொழில் முதலியவற்றில் இக்கடைகள் ஈடுபட்டுள்ளன என்று தெரிய வருகிறது.