உள்ளூர் நேரப்படி, நேற்று இரவு 12 மணி 25 நிமிடத்தில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத்தை ஏற்றிய சிறப்பு விமானம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத் சென்றடைந்தது. இது, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் 10வது வெளிநாட்டு நகராகும். இஸ்லாமபாத்தில் ஒலிம்பிக் தீபம் வருவது, இதுவே முதன் முறையாகும்.

பாகிஸ்தான் ஒலிம்பிக் குழுவின் தலைவர் Arif Hasanஉம், பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதர் luo zhaohui உம் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
உள்ளூர் நேரப்படி தீபத் தொடரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும். 65 தீபம் ஏந்தும் நபர்கள் பாகிஸ்தானிலான தொடரோட்டத்தில் கலந்து கொள்வர்.

இஸ்லாமபாதிலான தொடரோட்டம் முடிந்த பின், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம், இன்றிரவு புறப்பட்டு, இந்தியாவின் தலைநகரான புது தில்லிக்குச் செல்லும்.
|