• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-16 17:33:59    
அமெரிக்க ஆசிரியர் Joseph

cri
55 வயதான Joseph, அமெரிக்காவின் Florida மாநிலத்தைச் சேர்ந்தவர். நிழற்படக் கலைஞராக இருப்பதால், அவர் சுற்றுலாவை மிகவும் நேசிக்கின்றார். அவர் பல நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இந்நாடுகளில் ஆசிய நாடுகளை அவர் மிகவும் நேசிக்கின்றார். சீனர்களால் நடத்தப்படும் ஓர் இணையத் தளத்தில் அவர் நுழைந்த பின், சீனா மீது ஆவல் கொள்கின்றார். அவர் கூறியதாவது:

"ஓராண்டு காலம் இணையத்தின் மூலம் சீனர்களுடன் பரிமாற்றம் செய்தேன். சீனர்கள் அன்புடையவர்கள் என்று கருதுகின்றேன். சீனாவின் வேகமான வளர்ச்சியினால், எனது மனதில் சீனா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சீனாவுக்கு வருகை தருவதென முடிவு செய்தேன். அமெரிக்காவில் எனது வீடு மற்றும் காரை விற்பனை செய்தேன். பணியிலிருந்து விலகினேன். சீனாவின் பல இடங்களில் பயணம் மேற்கொண்டு, நிழற்படங்களை எடுக்க விரும்பினேன்" என்றார், அவர்.

2006ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் அவர் சீனாவுக்கு வந்தார். எதிர்பாராதவாறு, அவர் சீனாவில் நீண்டகாலமாக தங்கியிருந்து, பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி ஆசிரியராக பணி புரிகின்றார். காலம் செல்லச்செல்ல, சீனா மீதான அவரின் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அவரைப் பொறுத்த வரை, சீனப் பொருளாதாரத்தின் பெரும் வளர்ச்சி, அன்னியவர்களுக்கு பரந்துபட்ட வளர்ச்சி வாய்ப்பை தந்துள்ளது. சீனர்களின் நட்புறவினால், தமது வீடு போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது. அவர் சீனாவிலிருந்து பிரிந்து செல்ல விரும்பவில்லை. 2006ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, சீன நண்பர்கள் தமக்கு அளித்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, சீனருக்கு உதவுவதென அவர் முடிவு செய்தார். அவர் கூறியதாவது:

"சீனாவுக்கு வந்த பின், எனது சீன சக பணியாளர்கள் எனக்கு பெரும் உதவியளித்துள்ளனர். இந்த முக்கிய திருநாள், இன்னல் நிலைமையில் சிக்கிக் கொள்ளும் சீனக் குடும்பத்தினருக்கு உதவி செய்து, அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். தவிர, இதன் மூலம் கிறிஸ்துமஸ் திருநாள் பற்றிய அவர்களின் புரிந்துணர்வை அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினேன்" என்றார், அவர்.

சக பணியாளரின் உதவியுடன், He Nan மாநிலத்தின் Xin Mi நகரில் உள்ள ஒரு குடும்பத்தை அவர் சந்தித்தார். இக்குடும்பத்தில் Feng Xiao Yan மற்றும் Feng Xiao Lei என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் பெற்றோரை இழந்தனர். அவர்களின் தாத்தா, வாழ்க்கைச் சுமையை ஏற்க வேண்டியிருந்தது.

2006ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் திருநாள், Joseph இவ்விரு குழந்தைகளுக்கு புதிய ஆடைகள், அன்றாடத் தேவைப் பொருட்கள், உணவு பொருட்கள், பணம் ஆகியவற்றை வழங்கினார். அப்போது முதல் திங்கள்தோறும் அவர்களை சென்று பார்த்து, அவர்களின் வாழ்க்கை பற்றி விவாரித்து, படிப்புக்கு தேவையான பொருட்களை அவர்களுக்கு Joseph வழங்கினார். Josephஇன் அக்கறை மற்றும் உதவி காரணமாக, குழந்தைகளின் முகத்தில் சிரிப்பு மீண்டும் காணப்பட்டுள்ளது. அவர்களின் தன்னம்பிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. அண்மையில் Josephக்கு அனுப்பிய கடிதத்தில், 'நான் கல்வி கற்பதில் முயற்சி செய்வேன். எதிர்காலத்தில் உங்களை போல் மற்றவருக்கு உதவி செய்வேன்' என்று Feng Xiao Lei தெரிவித்தார்.

இக்குடும்பத்துடன் தொடர்பு கொண்டதன் மூலம், Joseph இக்குடும்பம் மீது ஆழ்ந்த அன்பு கொண்டுள்ளார். தமது வாழ் நாளில் இக்குடும்பத்துக்கு உதவி செய்ய அவர் விரும்புகின்றார்.

இக்குழந்தைகள் கல்வி கற்கும் பள்ளியில், கல்வி கற்பித்தல் சாதனங்களும் பாடப்புத்தகம் தவிர்த்த பிற நூல்களும் உடனடியாக தேவைப்படுவது பற்றி கேள்விப்பட்டப் பின், He Nan விவசாயப் பல்கலைக்கழக வளாகத்தில் நன்கொடை விற்பனை மூலம் திரட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, இப்பள்ளிக்கு பல்வகை கல்வி சாதனங்களை அவர் வாங்கினார். தவிர, பள்ளியில் நூலகம் ஒன்றை நிறுவ அவர் உதவி செய்தார். கல்வி கற்பித்தல் தொடர்பான பொருட்கள், இப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்ட போது, பள்ளி தலைவர் Liu Guan Junவின் கண்களில், கண்ணீர் நிரம்பியது. அவர் கூறியதாவது:

"திரு Joseph, எங்கள் பள்ளிக்கு நிதி உதவி செய்தார். அவருக்கு மிக்க நன்றி தெரிவிக்கின்றேன். ஓர் அன்னியராக முன்பின் தெரியாக குடும்பத்துக்கு அவர் உதவி செய்கின்றார். அவரது எழுச்சி பாராட்டத்தக்கது. எனது மனமுருகுகிறது" என்றார், அவர்.

இதற்குப் பிந்திய ஓராண்டுக்குள், Joseph மேலே சொல்லப்பட்ட குடும்பத்துக்கு சுமார் 10 ஆயிரம் யுவான் மதிப்புள்ள பணத்தையும் பொருட்களையும் வழங்கினார். பள்ளிக்கு அவர் நன்கொடையாக வழங்கிய நூல்களும், கல்வி கற்பித்தல் சாதனங்களும் மிக அதிகம். தற்போது, Xiao Yan மற்றும் Xiao Leiஉடன் இதே கிராமத்தில் வாழும் மக்களும் Josephஉம் உற்ற நண்பர்களாகியுள்ளனர். Joseph கூறியதாவது:

"கிராமவாசிகள் என் மீது நட்புறவு காட்டியுள்ளனர். அவர்கள் அன்புடையவர்கள். அவர்கள், தத்தமது வீடுகளில் மிக நல்ல பொருட்களை எனக்கு அன்பளிப்பாக வழங்குகின்றனர். என் வீடு போல் நான் உணர்ந்து கொள்கின்றேன்"என்றார், அவர்.

2007ஆம் ஆண்டு He Nan மாநில அரசு "மஞ்சள் ஆறு நட்புறவு விருதை" Josephக்கு வழங்கியது. He Nan மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ள அன்னிய நண்பர்கள், நிபுணர்கள், வெளிநாடுகளில் வாழும் சீனர்கள், ஹாங்காங் மற்றும் மக்கெளவின் பிரமுகர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் விருது இதுவாகும்.

தற்போது, Josephவின் வாழ்க்கையில் சுற்றுலா இன்னமும் இன்றியமையாத பகுதியாகும். ஓர் அரை ஆண்டு காலத்தில், சீனாவின் பல இடங்களுக்கு அவர் சென்றுள்ளார். சுற்றுலாவில் கண்ட எழில் மிக்க இயற்கைக் காட்சிகளை தாம் மறக்க போவதில்லை என்று அவர் கூறினார்.

"பெருஞ்சுவரில் ஏறினேன். 5 ஆயிரம் ஆண்டுகால சீனாவின் பண்பாட்டையும் வரலாற்றையும் உணர்ந்து கொண்டுள்ளேன். இது அற்புதமானது. தவிர, Xi An நகரில் உள்ள சுடுமண் படைவீரர்களின் சிலைகள் தலைசிறந்தது. மாபெரும் திட்டப்பணி இதுவாகும். Jiu Zhai Gou என்ற இடத்தின் அழகான காட்சிகள் என்னை மயக்குகின்றன. Gui Lin நகரில் உள்ள Li Jiang ஆற்றின் எழில் மிக்க காட்சிகள், மக்களை அனைத்தையும் மறக்கச்செய்யக்கூடியவை"என்றார், அவர்.

தாம் பயணம் மேற்கொண்டுள்ள அனைத்து நாடுகளில், சீனாவை மிகவும் நேசிப்பதாக Joseph கூறினார். அவர் கூறியதாவது:

"சீனாவில் வாழ்வதை, எனது வீட்டில் இருப்பதை போல் உணர்ந்து கொள்கின்றேன். அமெரிக்காவை நேசிக்கின்றேன். ஆனால், சீனா மற்றும் சீன மக்களை மேலும் நேசிக்கின்றேன். இங்கு எழில்மிக்க இயற்கைக் காட்சிகள் காணப்படுகின்றன. அதிகமான தாதுப் பொருட்களும் நிலக்கரியும் இருக்கின்றன. ஆனால், மிக தலைசிறந்த வளம், சீன மக்களே தான். சுற்றுலாவில், சீனர்கள் எனக்கு நட்புறவு காட்டியுள்ளனர்" என்றார், அவர்.

சீன மக்கள் தமக்கு காட்டியுள்ள அன்பை அனைவருடன் கூட்டாக அனுபவிக்க அவர் விரும்புகின்றார்.