• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-16 10:04:53    
பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரான தாரெஸ் சலாம்

cri
தாரெஸ் சலாம், தான்சானிய கூட்டுக் குடியரசில் தலைநகரமாகும். இது தான்சானியாவின் மிகப்பெரிய நகரமுமாகும். இதன் மக்கள் தொகை சுமார் 40 இலட்சம். இது, தான்சானியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. இது, இந்து மாக்கடலின் மைய பகுதியிலுள்ள கடல் மட்டத்திலிருந்து 8, 15 மீட்டர் உயரமுள்ள சமவெளிகளில் அமைந்துள்ளது. இது,

தலைசிறந்த இயற்கை துறைமுக நகரமாகும். ஆப்பிரிக்காவில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை நடத்தப்பட்ட ஓரே நகரம் தாரெஸ் சலாமாகும். ஒலிம்பிக் புனிதத் தீபம் ஆப்பிரிக்காவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும். ஆனால், ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதிக்கு வருவது இதுவே முதன் முறையாகும். 1964ம் ஆண்டு, தான்சானியா, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள துவங்கியது. 1980ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தடகள போட்டியில், தான்சானிய வீரர்கள் 2 வெண்கல பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம், 13ம் நாள் தாரெஸ் சலாம் சென்றடைந்தது.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை 13ம் நாள் தான்சானியாவின் தலைநகரான தாரெஸ் சலாம் நகரில் நடைபெறவுள்ளது. முன்பு, ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தை சீர்குலைத்த நடவடிக்கைகளுக்கு தாரெஸ் சலாம் மாநகராட்சித் தலைவர் Adam Kimbisa 11ம் நாள் கடும் கண்டனம் தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டம், தான்சானியாவின் பண்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், சர்வதேசச் சமூகத்தின் முக்கிய விழாவாகும். ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தை சீர்குலைக்க முயன்ற அனைத்து நடவடிக்கைகளையும்

வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்று Kimbisa கூறினார். ஆப்பிரிக்காவில் தீபத் தொடரோட்டத்தின் ஒரே நகரமான தாரெஸ் சலாம் நகரவாசிகள் மாபெரும் மதிப்பைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்நகரின் பல்வேறு வாரியங்கள், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்துக்கான ஆயத்த பணிகளை செய்து முடித்துள்ளன. ஒலிம்பிக் புனிதத் தீபத்தை எதிர்பார்க்கும் வகையில், செழுமையான நடவடிக்கைகளோடு மக்கள் தயாராக இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டம் சுமுகமாக நடைபெறுவதில் Kimbisa முழு நம்பிக்கை தெரிவித்தார்.