
இந்த அரண்மனைப் பூங்கா, 290 ஹெக்டர் பரப்புடையது. அதன் நான்கில் முன்று பங்கு இடத்தில் குன் மிங் ஏரி அமைந்துள்ளது. அங்குள்ள மாளிகைகள், கோபுரங்கள், விதானங்கள், தாழ்வாரங்கள், நடைபாதைகள், பாலங்கள், அழகிய மலைச்சாரல்கள், ஏரிக்கரைகள், தீவுகள் முதலியவற்றைப் பார்வையிட, ஒரு நாள் கூடப் போதாது என்றே கூறலாம். ஒவ்வொன்றும் தனித்தனி இயல்புடன் அமைந்தாலும் நிலக்காட்சித் தோற்றத்துக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன.

பூங்காவி்ல் நுழைந்ததும் நீலமும் பசுமையும் கலந்த ஏரியில் 17 வில்களைக் கொண்ட சலவைக்கல் பாலம், கண்களைக் கவர்ந்திழுக்கின்றது. 150 மீட்டர் நீளத்துக்கு உள்ள அதன் 500 தூண்களிலும் வெவ்வேறு நிலைகளில் 500 சிங்க வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

உயிர் மாடு போன்ற அளவுடைய இந்த வெண்கல எருது அதன் செவிகளை நீட்டியவண்ணம் நீரையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது. நுழைவுச் சீட்டு விலை: அதிக பயணிகள் உள்ள சுற்றுலாக் காலம் : 40 யுவான், பயணிகள் குறைவான காலம் : 30 யுவான் (மாணவர்களின் நுழைவுச் சீட்டு விலை:அரை விலை) பூங்கா திறக்கப்படும் நேரம் : காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை
|