உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 11 மணிக்கு, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாமாதிலிருந்து, இந்திய தலைநகர் புதுதில்லிக்குப் புறப்பட்டுச் சென்றது.
நேற்று மாலை 5 மணிக்கு இஸ்லாமாபாத்திலான Jinnah விளையாட்டு அரங்கில், ஒலிம்பிக் தீபம், ஏற்றப்பட்டு தொடரோட்டம் தொடங்கியது. 65 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர். இத்தொடரோட்டம் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. பாகிஸ்தான் அரசுத்தலைவர் முஷாரப், தலைமைமயைச்சர் Gilani, பாகிஸ்தான் ஒலிம்பிக் குழுத் தலைவர் Arif Hasan, பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதர் luo zhaohui ஆகியோர் இத்தொடரோட்ட விழாவில் கலந்து கொண்டனர்.
இஸ்லாமாபாத், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் 10வது வெளிநாட்டு நகராகும். இந்நகரில் ஒலிம்பிக் தீபம் வருவது, இதுவே முதன் முறையாகும்.
|