• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-17 10:43:04    
வளர்ச்சியடைந்துள்ள சீன பயணியர் விமானத் துறை (ஆ)

cri
கலை.........கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கழிந்த பின் சீனாவின் பயணியர் விமான சேவைத் துறையின் வளர்ச்சியை பார்க்கலாமா?

தமிழன்பன்......கண்டிப்பாக.

கலை.........தற்போது சீனா விமானங்களை தயாரிக்கும் வேளையில் பயணியர் விமான சேவைத் துறையை விறுவிறுப்பாக வளர்ச்சியுறச் செய்துள்ளது.

தமிழன்பன்.... சீனாவில் மொத்தம் எத்தனை விமான நிலையங்கள் தங்கள் சேவைகளை நடத்துகின்றன?

கலை.........இபபோது மொத்தம் 134 விமான நிலையங்கள் சீனாவில் உள்ளன.

தமிழன்பன்......இவற்றில் எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன?

கலை.........நடுவன் அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள மாநகரங்கள் மாநில தலைநகரங்கள், சிறப்பு நிர்வாக பிரதேசங்கள், புகழ் பெற்ற சுற்றுலா இடங்கள் ஆகியவற்றில் சர்வதேச விமான நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தமிழன்பன்......அப்படியிருந்தால் உலக தரத்திலான விமான நிலையங்கள் சீனாவில் எத்தனை?

கலை.........முக்கியமாக மூன்று உள்ளன.

தமிழன்பன்......அவைகளை பெயர்களோடு கூறுங்களேன்?

கலை.........கண்டிப்பாக. பெய்ஜிங் தலைநகர் விமான நிலையம், ஷாங்காய் பூதுங் விமான நிலையம் மற்றும் குவாங்சோ பையூன் விமான நிலையம் ஆகியவை இந்த மூன்று உலக தரத்திலான விமான நிலையங்களாகும்.

தமிழன்பன்......இது வரை சீனாவிலுள்ள நகரங்களையும் வெளிநாடுகளின் நகரங்களையும் இணைக்கும் பறத்தல் நெறிகள் எத்தனை என்பது உங்களுக்கு தெரியுமா?

கலை.........தெரியுமே. மொத்தம் 480 நெறிகள் உள்ளன. வெளிநாடுகளில் சுமார் 90 நகரங்களுடன் சீன பயணியர் விமான சேவைத் துறை சேவைத் தொடர்புகளை கொண்டுள்ளது.

தமிழன்பன்......எத்தனை சர்வதேச சிறப்பு விமான நெறிகள் எத்தனை உள்ளன?

கலை.........சீனாவின் ஹைநான் மாநிலத்தின் சான்யா-சியோல், ஹைகோ-பாங்கோக், பெய்ஜி-புடாபெஸ், ஹைகோ-ஒசாகா உள்ளிட்ட நெறிகள் முறையான நெறிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஹைகோ-சிங்கபூர், ஹைகோ-கோலாலம்பூர், ஹைகோ-சியோல், ஹைகோ-பூசான் முதலிய சர்வதேச நெறிகள் சிறப்பு விமான நெறிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

தமிழன்பன்......பயணிகளின் நிலைமையை பார்த்தால் இத்துறையிலான வளர்ச்சியின் எதிர்காலம் எப்படி?

கலை.........பெய்ஜிங் தலைநகர் விமான நிலையம் மட்டும் மூலம்

2005ம் ஆண்டில் 4 கோடி பயணிகள் சுற்றுப் பயணம் செய்துள்ளனர்.

தமிழன்பன்......2006ம் ஆண்டில் இத்தொகை 4 கோடியே 85 இலட்சமாக அதிகரித்தது.

கலை.........ஆமாம். 2007ம் ஆண்டில் இத்தொகை 5 கோடியே 34 இலட்சத்து 70 ஆயிரமாக அதிகரித்தது.

தமிழன்பன்......இவ்வாண்டில் பெய்ஜிங் தலைநகர் விமான நிலையம் மூலம் எத்தனை பேர் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள் என்பதை முன்கூட்டியே மதிப்பிடுள்ளார்களா?

கலை......... சுமார் 6 கோடி பயணிகள் சுற்றுப் பயணம் மேற்கொள்வர் என்று மதிப்பிட்டுள்ளனர்.

தமிழன்பன்...... இந்த எண்ணிக்கையை பார்த்தால் 2015ம் ஆண்டில் நனவாக்கப்படும் பயணிகளின் எண்ணிக்கை 7 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே நிறைவேற்றப்பட்டுள்ளது.

கலை.........இதை கேட்டு மகிழ்ச்சியடையலாம்.

தமிழன்பன்...... உள்ளூர் பயணியர் விமான அலுவல் தவிர, சர்வதேச பயணியர் விமான சேவைக்கு சீனா பங்கு ஆற்றியுள்ளதா?

கலை.........கண்டிப்பாக. சீனா சர்வதேச பயணியர் விமான நிறுவனங்களின் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக ஈடுப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பொது விமானச் சேவை தொடர்பான சர்வதேச பொது இனக்க ஒப்பதங்கள் மற்றும் உடன்படிக்கை முதல் குறிப்புகளில் சீனா கையொப்பமிட்டுள்ளது. இயங்கி வருகின்ற விமான நிலையங்களில் 31 சர்வதேச பொது விமான நிறுவனங்களில் பதிவு செய்து சர்வதேச சேவைகளை வழங்கிவருகின்றது.

தமிழன்பன்......இது பற்றி விபரமாக கூறலாமா?

கலை.........மிக்க மகிழ்ச்சி. அமெரிக்காவில் செப்டெம்பர் 11 நடைபெற்ற பிறகு ஆப்கான் அரசு அதன் வான் வழியை மூடுவதாக அறிவித்தது. அப்போது ஆப்கான் வான் வழியாக செல்ல வேண்டிய சீன விமானங்களும் மற்ற நாடுகளின் விமானங்களும் வழியை மாற்றி பறக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

தமிழன்பன்......அப்போது சீனா எந்த மனபான்மை காட்டியது?

கலை.........அப்போது தென் கிழக்காசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் பறந்து செல்லும் விமானங்கள் ஆப்கான் வழியாக பறந்து செல்ல வேண்டும்.

அந்த நிலையில் சீனா முன்முயற்சியுடன் ஆப்கான் வழியாக மற்ற இடங்களுக்கு பறந்து செல்ல வேண்டிய விமான நிறுவனங்களுடன் ஒத்துழைத்து 1200 விமான பறத்தல் அலுவலை ஏற்றுக் கொண்டு சீனா வழியாக பறந்து செல்வதை உத்தரவாதம் செய்தது.

தமிழன்பன்......அப்போது சீனாவின் சிங்கியாங் உய் கூர் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் உலுமுச்சி நகர் இந்த கடமையை ஏற்று கொண்டு சிறப்பாக நிறைவேற்றியதை கேட்டறிந்தேன்.

கலை.........ஆமாம். நவம்பர் திங்கள் மட்டும் 1200 விமானங்கள் அதன் வான் வழியாக பறப்பதற்கு உலும்சி சர்வதேச விமான நிலையம் தொழில் நுட்ப ரீதியில் உத்தரவாதம் அளித்தது.

தமிழன்பன்......சரி நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடையும் நேரம் ஆகிவிட்டது.

கலை.........இன்றைய நிகழ்ச்சியை கேட்ட பின் உங்கள் கருத்து தெரிவிக்க விரும்பினால் மின்னஞ்சல் அல்லது தொலை பேசி மூலம் கருத்து தெரிவிக்கலாம்.