• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-17 10:46:49    
அழியாத காதலில் 500 கடிதங்கள்

cri
அழியாத காதலில் 500 கடிதங்கள்

காதலர்கள் பிரிந்துபோனாலும், அவர்களில் ஒருவர் இறந்துபோனாலும் நினைவுகளில் எப்போதும் காதல் வாழ்ந்துகொண்டிருக்கும். லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி காதலை இதற்கு எடுத்துக்காட்டாக சுட்டுவதற்கு பதிலாக சீனாவில் இறந்துபோன தனது கணவனுக்கு இன்னும் கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கும் 75 வயது மூதாட்டி வான் ஃபெங்சியாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். பெய்சிங்கின் துங்செங் பகுதியில் வாழும் இந்த மூதாட்டியின் கணவர் இறந்து 14 ஆண்டுகள் ஆகிறது. கணவர் மறைந்துபோனாலும் அவரது நினைவும், அவர் மீதான தன் அன்பும் என்றும் குறையாமல் பிரிவுத்துயரை கடிதங்களாய் தனது கணவனுக்கு எழுதியிருக்கிறார் இந்த மூதாட்டி. தன் சோகத்தையும், கணவர் மீதான அன்பையும் மற்றவர்களிடம் சொன்னால் அவர்களுக்கு ஒருவேளை சலிப்பாகக்கூட இருக்கும் ஆனால் கடிதங்கள் சலித்துக்கொள்ளாது என்று கூறும் மூதாட்டி வான் ஃபெங்சியா இதுவரை மொத்தம் 530 கடிதங்கள் எழுதியிருக்கிறார். முடிந்தவரை எழுதுவது, தள்ளாத வயதில் எழுத இயலாதபோது, ஏற்கனவே எழுதிய கடிதங்களை மீண்டும் மீண்டும் படித்து வாழ்க்கை ஓட்டுவது என்று திட்டம் வைத்திருக்கும் இந்த மூதாட்டி தனது கடிததொகுப்பிலிருந்து 68 கடிதங்களை ஒரு அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக தந்துள்ளாராம். உண்மையான காதல் என்றும் அழிவதில்லை என்பது உண்மைதான் போலும்.

உலகின் மிக நீளமான கடற்பாலம்

உலகின் மிக நீளமான கடற்பாலமாக, ஷாங்காய்க்கு அருகில் ஹாங்ஷோ வளைகுடாவில் அமையவுள்ள 36 கிலோமீட்டர் பாலம் வருகின்ற மே முதள் நாள் போக்குவரத்துக்கு திறந்துவிடப்படவுள்ளது. 2003ம் ஆண்டு நவம்பரில் தொடங்கிய இந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஏறக்குறைய முற்றாக முடிவடைந்துள்ளன. இப்பாலம் போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டால் கிழக்கு சீனாவின் சேச்சியாங் மாநிலத்திலுள்ள மிகவும் பரபரப்பான துறைமுக நகரமான நிங்போவுக்கும், ஷாங்காய்க்கும் இடையிலான சாலை வழி பயணத்தை 120 கிமீ தூரம் குறைக்கும். 16 இலட்சத்து 40 ஆயிரம் கோடி டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கடற்பாலம் இருபுறமும் ஆறுவழிச்சாலை வசதி கொண்டது. ஷாங்காய், சேச்சியாங், ஜியாங்சு ஆகியவற்றின் ஏறக்குறைய ஒரு இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பை உள்ளடக்கிய யாங்சி ஆற்று வடிநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒன்றிணைப்புக்கு இந்த பாலம் பெரிதும் துணைபுரியும் எனப்படுகிறது.