புகழ்பெற்ற தைவான் நாட்டுப்புறப்பாடலைக் கேட்டு ரசியுங்கள். " ஆலி மலையிலுள்ள பெண்கள் " என்பது இப்பாடலின் தலைப்பாகும். இதன் மூலம் நீங்கள் ஆலி மலையின் அழகை உணரவேண்டும் என விரும்புகின்றேன்.
"உயர்ந்த மலை பச்சை நிறமானது.
ஆற்று பள்ளத்தாக்கு நீர் நீல வண்ணமானது.
ஆலி மலையிலுள்ள இளம் பெண்கள்,
நீரிலும் பார்க்க ஆழகானவர்கள்.
ஆலி மலையிலுள்ள இளைஞர்கள்,
மலையிலும் பார்க்க பலமானவர்கள்.
பெண்களும் ஆண்களும் எப்பொழுதும்
பிரிய மாட்டார்கள்.
நீல நீர், பச்சை மலையைச் எப்பொழுதும்
சுற்றி வருகின்றது." என்று இப்பாடல் ஒலிக்கிறது.
|