2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, அறிவுசார் சொத்துரிமையை பாதுகாப்பது பற்றிய சீரான சூழலை உருவாக்கும் மனவுறுதியும் திறனும் சீன அரசுக்கு உண்டு.
இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமை ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் Yin Xintian இவ்வாறு கூறினார்.
ற்போது, சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அறிவுசார் சொத்துரிமை, படைப்புரிமை, வணிகச் சின்னம் முதலிய துறைகளிலான சட்டங்கள், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் அறிவுசார் சொத்துரிமையை பாதுகாப்பதற்கு சட்ட ஆதாரம் வழங்குகின்றன. ஒலிம்பிக் சின்னத்தை பாதுகாப்பது பற்றிய விதிகளை சீனாவின் தொடர்புடைய வாரியம் வகுத்துள்ளது. மேற்கூறிய சட்டங்களும் விதிகளும், ஒப்பீட்டளவில் ஒலிம்பிக் அறிவுசார் சொத்துரிமையை பாதுகாப்பதற்கான முழுமையான சட்ட அமைப்பு முறையை உருவாக்குகின்றன என்று Yin Xintian தெரிவித்தார்.
தவிரவும், கடந்த சில ஆண்டுகளில், ஒலிம்பிக் சின்னத்துக்கான உரிமையை அத்து மீறிய சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்கும் அளவை சீனத் தொழில் மற்றும் வணிக நிர்வாக வாரியங்கள் விரிவாக்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
|