• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-17 14:15:27    
தலாய் லாமாவின் அறத்தை செய்தி ஊடகங்கள் வெளிப்படுத்தல்

cri

அண்மையில், சில மேலை நாட்டு செய்தி ஊடகங்கள் அடுத்தடுத்து கட்டுரை வெளியிட்டு, திபெத் சுதந்திரத்துக்கு தலாய் லாமா வக்காலத்து வாங்குவது பற்றிய நோக்கத்தை வெளிப்படுத்தின.

Stern என்ற ஜெர்மன் வார இதழ் வெளியிட்ட கட்டுரையில், மேலை நாடுகளின் மக்கள் தலாய் லாமாவை பெரிதும் மதிக்கின்றனர். பற்றில்லாத அமைதியான வாழ்வு பற்றிய புத்த மதத்தின் கருத்தால், தலாய் லாமாவின் கருத்துகளும் நடவடிக்கைகளும் அகிம்சையானவை என்று மேலை நாடுகளின் பல மக்கள் கருதினர். இருப்பினும், தலாய் லாமா திபெத்தை ஆண்ட போது, பண்ணை அடிமைகளின் விகிதம் 95விழுக்காட்டை எட்டியது. பெரும்பாலான திபெத்தியர்கள் கல்வி பெற அனுமதிக்கப்படவில்லை. எனவே, சீன அரசு பண்பாட்டை ஒழிப்பது பற்றிய தலாய் லாமாவின் குற்றச்சாட்டு, பொறுப்பற்ற செயலாகும் என்று இவ்வார இதழ் குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் திங்கள் 15ம் நாள், அமெரிக்காவின் The Christian Science Monitor எனும் செய்தித்தாள், அமெரிக்க-சீன உறவை சீர்குலைத்த தலாய் லாமாவின் அமெரிக்க பயணம் என்ற தலைப்பிலான கட்டுரையை வெளியிட்டது. அமெரிக்காவில் தலாய்லாமா பயணம் மேற்கொண்டு, அமெரிக்க-சீன உறவை பாதிப்பது பற்றி இது கவலை தெரிவித்துள்ளது.

தவிரவும், Lianhe Zaobao என்ற சிங்கப்பூரின் செய்தி தாளின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில், பெத் பிரச்சினையின் மூலம், சீனாவை எதிர்க்கும் மேலை நாடுகளின் சக்திகள் மிகப் பெரிய நலனை பெற்றுள்ளன. ஆனால், திபெத் மக்கள் மிகவும் கடுமையாக புண்படுத்தப்பட்டனர் என்று சுட்டிக்காட்டியது.