• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-18 10:30:52    
திபெத் பல்வேறு சமூக வட்டாரங்களின் உதவி

cri
மார்ச் 14ம் நாள் வன்செயல்களால், இறுதியில், 18 அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். மேலும் பலர், கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களின் வீடுகள் சீர்குலைக்கப்பட்டன. உடமை இழப்பு ஏற்பட்டது. அவர்கள் இன்பமான தாயகத்தை மீண்டும் கட்டியமைப்பதற்காக, சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு, பல்வேறு பிரிவுகள், பல்வேறு துறையினர் ஆகியோர், பல்வகை சேவைகளையும், பணத்தையும் பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

தற்போது, திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசின் நிதித் துறை, இந்த வன்செயல்களில் இலக்காகி மரணமடைந்தோரின் குடும்பத்தினருக்கு 30 இலட்சம் யுனானை வழங்கியுள்ளது. பலியானவரது குடும்பங்களுக்கு நன்கொடையைத் திரத்தும் நடவடிக்கையை லாசாவின் பல்வேறு சமூக வட்டாரங்கள் நடத்தின.

அரசின் உதவிக் கொள்கை மற்றும் சமூகத்தின் நிதானத்தால், லாசாவிலுள்ள சந்தைகள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. தற்போது, 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட லாசாவின் தனியார் கடைகள், மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன.