மார்ச் 14ம் நாள் வன்செயல்கள் பற்றி, சீனத் திபெத்தின் லாசா நகரின் பொது பாதுகாப்புத் துறை விசாரித்த நிலைமையை, சீனத் தேசிய தொலைக்காட்சி நிலையம் இன்று வெளியிட்டது.
இது வரை, ஐயத்துக்குரிய 170 பேர், இந்த வன்செயல்களில் பங்கு கொண்டதற்கான சான்றுகள் இருக்கின்றன. தொடர்புடைய வாரியங்கள் அவர்களைக் கைது செய்து வருகின்றன. தற்போது, ஐயத்துக்குரிய 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 11 பேர் தாமாகவே சரணடைந்தனர். அவர்களுக்கான தண்டனை அளவு, குறைக்கப்படக் கூடும். இன்று லாசா நகரின் பொது பாதுகாப்புத் துறையிலிருந்து இத்தகவல் கிடைத்தது.
|