அமெரிக்க Minnesota மாநிலத்தில் தலாய்லாமா மேற்கொண்ட திபெத் சுதந்திர நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அமெரிக்கா வாழ் சீனர்கள், நேற்று பேரணி நடத்தினர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வேண்டுமென்றே சீர்குலைக்கும் திபெத் சுதந்திரவாத பிரிவினைச் சக்திகளின் நடவடிக்கைகளை இவர்கள் கண்டித்துள்ளனர்.
இணையத்தின் மூலம், வெளிநாடு வாழ் சீனர்களும் மாணவர்களும் இப்பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம், அமெரிக்கப் பொது மக்கள், திபெத் வன்முறைச் செயல்களின் உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று இப்பேரணியில் கலந்து கொண்ட சீனப் பொறியியலாளர் tan wenzhao கூறினார்.
|