ஆக்ஷங் இன மக்களில் பொரும்பாலானோர், யுன்னான் மாநிலத்தின் dehong தைய் மற்றும் சிங்போ இனத் தன்னாட்சி சோவின் longchuan, luxi முதலிய மாவட்டங்களில் கூடி வாழ்கின்றனர். பிறர், yingjiang, longling முதலிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். அதன் மக்கள் தொகை, 27 ஆயிரத்து 7 நூறாகும்.

ஆக்ஷங் இனத்துக்கு சொந்த மொழி உண்டு. ஆனால், எழுத்துக்கள் இல்லை. இம்மொழி, ஹய்-திபெத் மொழி குடும்பத்தின் மியன்மார் கிளையைச் சேர்ந்தது. இது, lianghe, husa ஆகிய இரு வட்டார மொழிகளாகக் கொண்டது. நீண்டகாலமாக, ஹன் மற்றும் தைய் இன மக்களுடன் இணைந்து வாழ்வதால், பெரும்பாலான ஆக்ஷங் இன மக்களால், சீன மொழியையும், தைய் இன மொழியையும் பேச முடியும். இவ்வினத்துக்கு, அதிகமான வாய் மூல இலக்கியங்கள் உண்டு.

ஆக்ஷங் இன மக்கள், பொதுவாக புத்த மதத்தில் நம்பிக்கை கொள்கின்றனர்.
அவர்கள் முக்கியமாக, வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். நெல் பயிரிடுவதால் புகழ் பெறுகின்றனர். இங்கு, பல்வகை நெல்பயிர்கள் உண்டு. அவை சிறந்த தரம் உடையவை. liang he பிரதேசத்தின் haoangong என்ற நெல் வகை, "நெல் அரசனாகக்" கூறப்படுகின்றது.
நூறு ஆண்டுகளாக, ஆக்ஷங் இன மக்கள் தயாரித்த கத்திகள், புகழ் பெற்றவை. குறிப்பாக, husa என்ற கத்தி, பெரும் புகழ் பெற்றது.

கதவை மூடும் விழா, கதவை திறக்கும் விழா, நீர் தெளிப்பு விழா முதலியவை, ஆக்ஷங் இன மக்களின் முக்கிய மத திருவிழாக்களாகும். இவை தவிர, தீப விழா, woluo விழா, வசந்த விழா முதலியவை, இவ்வினத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த விழாக்களாகும். woluo விழாவும் தீப விழாவும் மிக பெருமளவில் கொண்டாடப்படுகின்றன. இந்த விழாக்களின் போது, அக்ஷங் இன மக்கள் பன்றியையும், மாடுகளையும் கொன்று வழிபாடு செய்து, பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அங்குள்ள தைய் இன மக்களை போலவே, அவர்கள் நீர் தெளிப்பு விழாவையும் கொண்டாடுகின்றனர். இவ்விழா, இளைஞர்கள் காதலர்களைத் தேடுகின்ற நல்ல வாய்ப்பாகும்.
|