• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-18 09:45:35    
திபெத் இன மக்களின் புதிய வாழ்வு

cri
பல்வேறு இயற்கை நிலைமைகளால், மேற்கு சீனாவிலுள்ள திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், சிறுப்பான்மையினரின் வாழ்க்கை, வறுமை மிகுந்ததாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, சீன அரசு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள வறுமை ஒழிப்புப் பணிகளை வலுப்படுத்தி வருகிறது. 2006ம் ஆண்டு முதல், இப்பிரதேசத்தில் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குடியிருப்புத் திட்டப்பணியை சீன அரசு செயல்படுத்தத் துவங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கட்டுமானத்துக்கான மொத்த ஒதுக்கீட்டு மதிப்பு, 700 கோடி யுவானை எட்டியுள்ளது. இது வரை, 1 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்களின் குடியிருப்புக் கட்டுமானக் கடமைகளை நிறைவேற்றியுள்ளது. சுமார் 6 இலட்சம் விவசாயிகள் மற்றும் ஆயர்கள் இதனால் பயன் பெற்றுள்ளனர். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் Lasaவின் Yang Da வட்டத்திலுள்ள திபெத் இனத்தவரான Ben bha, பயன் பெற்றோரில் ஒருவராவார்.

தன் விசாலமான வரவேற்பு அறையில், அவர் பட்டர் தேனீரை எமக்கு வழங்கினார். அதே வேளையில், எங்களிடம் அவர் தற்போது குடியிருக்கும் அந்த புதிய வீடு பற்றி கூறினார்.

2007ம் ஆண்டு, நான் இந்த புதிய வீட்டில் குடி பெயர்ந்தேன். 2006ம் ஆண்டு முதல், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசு, முழு பிரதேசமும், குடியிருப்புத் திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளது. எனது வீடு, இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அரசு, எனக்கு 24 ஆயிரம் யுவானை, உதவித்தொகையாக வழங்கியது. எஞ்சிய பணத்தை நானாகவே திரட்டி, இவ்வீட்டைக் கட்டியமைத்தேன். முன்பு, நான் தங்கியிருந்த வீடு, மிகவும் சிறிதாக இருந்தது. அதற்கு நல்ல சூரிய ஒளி கிடைக்காததோடு, தூய்மையற்றும் இருந்தது. தற்போது, இந்த விசாலமான வீட்டில் தங்கியிருப்பது, எனது வயதான தந்தையை மகிழ்ச்சியாக வாழச் செய்கிறது என்று அவர் கூறினார்.

உள்ளூர் அரசு, இந்தக் குடியிருப்புத் திட்டப்பணியில் அவருக்கு உதவி செய்தது மட்டுமல்ல, கிராமவாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்த, பல்வேறு துறைகளில் அவரது குடும்பத்திற்கு அதிகமான ஆதரவுகளையும் அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

பல்வேறு நிலை அரசுகள் எமது கிராமப்புறத்தில் செய்யும் உதவிகள், அதிகமாக இருக்கின்றன. எமக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும், நடைமுறைப்படுத்தப்பட்டன. குடியிருப்புத் திட்டப்பணிகளுக்கும், விவசாயிகள், ஆயர்களுக்கும், குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்குமான மானியங்கள் எல்லாம், அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், விளைநிலத்தின் பரப்பளவின்படி, கிராமப்புறத்திலுள்ள விவசாயிகளுக்கு குறிப்பிட்ட அளவு மானியங்களை அரசு வழங்குகிறது. தவிர, எமது வேலை வாய்ப்பு வழிகளை விரிவாக்குவதற்கும், அரசு உதவி செய்கிறது. எமக்கு சில இலவசமான பயிற்சி வகுப்புகளைத் திறந்து வைத்துள்ளது. வேளாண் விளைப் பொருட்களின் தரத்தை உயர்த்த, இவ்வகுப்புகள், சில எளிதான, பயன்தரும் அறிவியல் தொழில் நுட்ப அறிவையும், மிதமிஞ்சிய உழைப்பாளருக்கு துணைத் தொழில் செய்யும் வாய்ப்பு வழங்க, மோட்டார் வாகனங்களை பழுது பார்க்கும் செயல்திறன்களையும் இவ்வகுப்புகள் வழங்குகின்றன என்று அவர் கூறினார்.

அதைத் தவிர, Ben bhaவின் தம்பியும், பயன் பெற்றவரில் ஒருவராவார். உள்ளூர் அரசு ஏற்பாடு செய்யும் பயிற்சி வகுப்புகள் மூலம், அவர் சில தொழில் நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்தார். இப்பொழுது, வெளியூரில் துணைத் தொழில் செய்கிறார். சில சேமிப்புகளையும் கொண்டுள்ளார்.

புத்தாண்டு கடந்து விட்டது. கிராம வாசிகள், புதிய வீடுகளில் குடி பெயர்ந்தது மட்டுமல்ல, அரசு வழங்கிய மானியங்களையும் கொண்டுள்ளனர். கைகளில், மேலும் அதிகமான பணம் இருப்பதால், புத்தாண்டுக்கான உணவுப் பொருட்களை வாங்கலாம். கடந்த ஆண்டுகளை விட, இந்த வசந்த விழா சிறப்பாக இருக்கிறது. அவர் கூறியதாவது,

 

முன்பு, வாழ்க்கை நிலை கொஞ்சம் தாழ்ந்த நிலையில் இருந்தது. வசந்த விழாவிலும், சாதாரண நாட்களில் உண்பது போலவே உண்ண முடிந்தது. குளிர் பதனப் பெட்டி இல்லை என்பதால், மிகுந்த உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்க முடியவில்லை. இப்போது, நிலைமை மாறி விட்டது. குடும்பத்தினர், முன்னதாகவே பல கறிகளை வாங்கி, குளிர் பதனப் பெட்டியில் வைக்க முடியும். அத்துடன், தட்டுமுட்டுப் பொருட்கள் எல்லாம், தயாராக வாங்கி போடப்பட்டு விட்டன. விழா, கோலாகலமாக நடைபெற்றது. முன்பு, கிராமத்தில் ஒரே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி தான் இருந்தது. தற்போது, ஒவ்வொரு வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டி இருக்கின்றது. அதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்திகள், பல தொலைக் காட்சி நாடகங்கள் முதலியவற்றை பார்த்து மகிழ்ச்சியடைய முடியும். இது, விழா நாட்களிலுள்ள மக்களின் மகிழ்ச்சியை அதிகரித்து, மக்களின் பண்பாட்டு வாழ்க்கையை பெரிதும் செழிப்பாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

Ben bhaவின் தந்தை Pur put se ring, முதியவர் ஆவார். பல பத்து ஆண்டுகளாக, திபெத் மக்களின் வாழ்க்கை நிலைகளின் மாற்றங்களைக் கண் கூடாக அவர் கண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட்ட போது, அவர் உணர்ச்சி வசப்பட்டுக் கூறியதாவது,  

முன்பு, எமது வீட்டின் பரப்பளவு, 20 சதுர மீட்டருக்குக் குறைவாக இருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்ல கொள்கையினால், இப்பொழுது, நாங்கள் புதிய வீட்டில் குடி பெயர்ந்துள்ளோம். எனக்கு வயது 67. புதிய வீட்டில் முதிய காலத்தை அனுபவிப்பது, மிகவும் இன்பமாக இருக்கிறது என்றார் அவர்.

Ben bhaவின் கடைசி மகன் Dam dren wong duiக்கு வயது 10. குடும்ப வாழ்க்கை நிலைமையின் மேம்பாட்டைக் கண்டு, அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான்.

புதிய வீட்டில் குடி பெயர்ந்த பின், இரண்டு தொலைக் காட்சிப் பெட்டிகளும், பல அழகான தட்டுமுட்டுப் பொருட்களும் இருக்கின்றன. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று அவன் கூறினான்.

Ben bhaவின் குடும்பத்தினரின் வாழ்க்கை, சீன அரசு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்திய விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குடியிருப்புத் திட்டப்பணியின் மாதிரியே ஆகும். சீன அரசின் ஆதரவுடன், வரும் 3 ஆண்டுகளுக்குள், திபெத் பிரதேசத்தின் அரசு ஆண்டுதோறும் 10 கோடி யுவானை ஒதுக்கீடு செய்து, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குடியிருப்புத் திட்டப்பணியின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்தும். இப்பிரதேசத்தின் 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆயர்களை, பாதுகாப்பான, வசதியான புதிய வீடுகளில் வாழச் செய்யும்.