பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரான Muscat
cri
Muscat, ஓமனின் தலைநகரமாகும். இதன் தென் கிழக்கு பகுதியில் அரபுக் கடலும் வட கிழக்கு பகுதியில் ஓமன் வளைகுடாவும் அமைந்துள்ளன. இதன் பரப்பளவு 50 சதுர கிலோமீட்டராகும். இந்நகரின் மக்கள் தொகை சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரமாகும். பழங்கால சீனா மற்றும் அரபு நாடுகளின் முக்கிய வர்த்தகத் துறைமுகமாக Muscat
விளங்கியது. அரபு நாடுகளில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை நடத்தும் ஓரே நகரம் இதுவாகும். 2002ம் ஆண்டு, 2006ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கைகளை இது நடத்தியது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை நடைபெறுவது இதுவே முதன் முறையாகும். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம், 14ம் நாள் Muscat சென்றடைந்தது.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை உபசரிக்கும் ஒலிம்பிக் குடும்பங்கள் எனும் நடவடிக்கை 11ம் நாள் பன்முகங்களிலும் துவங்கியது. இந்த நடவடிக்கையில் ஓராயிரம் குடும்பங்கள் சேர்க்கப்படும். பெய்சிங் சுற்றுலா துறை ஆணையத்தின் துணைத் தலைவர் Xiong Yumei அம்மையார் 10ம் நாள் செய்தி ஊடகங்களிடம் இத்தகவலை வெளியிட்டார். பெய்சிங் மாநகரம்-வட்டாரத்தை சேர்ந்த குடும்பங்கள் இதில் சேர்க்கப்படும். ஏப்ரல் 30ம் நாளுடன், விண்ணப்பப் பணி முடிவடையும் என்று Xiong Yumei அம்மையார் கூறினார்.
ஒலிம்பிக் குடும்பங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை முக்கியமாக உபசரிக்கும். விண்ணப்பப் பணிகள் முடிவடைந்த பின், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருத்தமான குடும்பங்களுக்கு சுற்றுலா வாரியங்கள் பயிற்சி அளிக்கும் என்றும் அவர் கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டத்தை தொடர்ந்து நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்வதற்கு ஆஸ்திரேலிய விளையாட்டு அமைச்சர் Kate Ellis அம்மையார் இன்று வரவேற்பு தெரிவித்தார். ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் முக்கிய பகுதியாகும் என்பதால், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத்
தொடரோட்டம் தொடர்ந்து நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்த செய்தியை அகறிந்த பின், தாம் வரவேற்பு தெரிவித்ததாக அவர் கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம் ஆஸ்திரேலியாவுக்கு வந்த பின், ஒலிம்பிக் மற்றும் வீரர்களில் கவனம் செலுத்துவது போல் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்திலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று Kate Ellis அம்மையார் விருப்பம் தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டம் 24ம் நாள் Canberra நகரில் நடைபெறும்.
|
|