• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-18 09:47:15    
தையல் தொழில் பயிற்சி பள்ளியை நிறுவிய Tang Yue Hong அம்மையார்

cri
An Hui மாநிலத்தின் Xiu Ning மாவட்டத்தில் Qiong Qiong ஆடை தொழில் பயிற்சி பள்ளி இருக்கின்றது. இப்பள்ளியை நிறுவிய Tang Yue Hong அம்மையார் மக்களால் மிகவும் பாராட்டப்படுகின்றார். கடந்த 20 ஆண்டுகால தமது முயற்சியுடன், விவசாயிகளின் குழந்தைகளுக்கு தையல் தொழில் நுட்ப பயற்சி அளிக்கும் இப்பள்ளியை அவர் உருவாக்கினார். பெரும் எண்ணிக்கையிலான கிராம இளைஞர்கள் இப்பள்ளியில் தையல் தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்ட பின், ஊதியம் ஈட்ட தொடங்கியுள்ளனர்.
45 வயதாகும் Tang Yue Hong அம்மையார் 1982ஆம் ஆண்டு உயர் பள்ளி படிப்பை முடித்த பின், ஆசிரியர் ஒருவரிடமிருந்து தையல் தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்டார். 1983ஆம் ஆண்டு Xiu Ning மாவட்டத்தின் ஆடை ஆலை ஒன்றில் அவர் வேலை செய்தார். மூத்த தொழிலாளர்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட அவரது துணி கத்தரிப்பு மற்றும் தையல் தொழில் நுட்பம் பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால், தனது நம்பிக்கை அதிகரிக்கும் போது, பல்வேறு காரணங்களால் அந்த ஆலை மூடப்பட்டது.
Tang Yue Hong வேலை இழந்தார். எனவே அவர் மன வருத்தம் அடைந்தார். மன உறுதி கொண்ட அவர் ஆடை ஆலையில் வேலை செய்யும் போது தாம் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, மாவட்டத்தில் ஆடை கடை ஒன்றை திறந்து வைத்தார். அவர் தயாரித்த ஆடைகள் பாணியில் புதுமையானதாகவும், தரத்தில் தலைசிறந்ததாகவும் இருந்தன. அதனால், அவரது கடையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற தொடங்கியது. கல்வி கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால், பள்ளிக் கல்வியை தொடர இயலாத கிராமப்புற ஏழை குடும்பங்களின் குழந்தைகள் Tang Yue Hong அம்மையாரி்ன் கடைக்கு வந்து ஆடை கத்தரிப்பு மற்றும் தையல் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டனர். மேலதிக மக்களுக்கு, தையல் தொழில் நுட்பத்தை கற்று கொடுக்கும் வகையில், 1988ஆம் ஆண்டு, அவரே முதலீடு செய்து, Qiong Qiong தையல் தொழில் நுட்ப பயிற்சி பகுதியை நிறுவினார்.
Tang Yue Hong அம்மையார் தாமாகவே மாணவர்களுக்கு தையல் தொழில் நுட்பத்தை கற்றுக்கொடுத்தார். தவிர, மாணவர்களுக்கு அவர் அடிக்கடி உதவியும் செய்தார். நேர்மையானவராக உருவாவது என்ற கருத்தை மாணவர்களுக்கு விவரித்ததோடு,

அலுவலக ரீதியிலான செயல்பாடுகளையும் அவர் கற்றுக்கொடுத்தார். தையல் கடைகளை திறந்து வைத்து, சம்பளம் அடைய பயிற்சியை முடித்த மாணவர்களை அவர் ஊக்குவித்தார். Wan An ஊரில் வாழும் Huang Shu Su மற்றும் Yu San Mei தையல் தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்ட பின், தங்களது சொந்த ஊரில் தையல் கடையை திறக்க விரும்பினர். ஆனால், அவர்களுக்கு நிதித்தொகை கிடைக்கவில்லை. Tang Yue Hong அம்மையார், அவர்களுக்கு உதவி செய்து, நிதித்தொகையை வழங்கினார். தற்போது, Huang Shu Su மற்றும் Yu San Meiயின் கடையிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. படிப்படியாக, Tang Yue Hong அம்மையார், ஆடை தயாரிப்பு தொழில் நிறுவனங்களின் ஏற்றுக்கொள்ளலையும், மக்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளார். எனவே படிப்படியாக, தையல் தொழில் நுட்ப பயிற்சி பகுதிக்கு சென்று தையல் தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1989ஆம் ஆண்டு, அவர் மேலதிக முதலீடு செய்து, தையல் கருவிகளை வாங்கி, வாடகை முறையில் கல்வி கற்பித்தல் என்பதற்கு இடத்தை விரிவாக்கி, அதிக சம்பளத்துடன், தொழில் நுட்ப திறமைசாலிகளை வேலைக்கு அமர்த்தினார்.
2004ஆம் ஆண்டு, Tang Yue Hong அம்மையார் உருவாக்கிய பயிற்சி பகுதி, மாவட்ட அரசால், சூரியன் திட்டத்துக்கான பயிற்சி தளம் என்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் அவ்வாய்ப்பை இறுகப்பற்றிக் கொண்டு, கடந்த 20 ஆண்டுகால அனுபவங்களைக் கொண்டு, மாவட்ட அரசு, மாவட்ட மகளிர் சம்மேளனம் மற்றும் தொடர்புடைய வாரியத்தின் உதவியுடன், Qiong Qiong ஆடை தொழில் பயிற்சி பள்ளியை அவர் நிறுவினார்.
இப்பள்ளியின் மூலம் சுமார் 5800 விவசாயிகள் பயிற்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 95 விழுக்காட்டினர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அவ்வாறு பயிற்சி பெற்ற 80 விழுக்காட்டுக்கு மேலான மாணவர்கள், பெய்சிங், ஷாங்காய், Zhe Jiang, Jiang Su முதலிய வளர்ந்த மாநிலங்கள் மற்றும் மாநகரங்களில் உள்ள பெரிய மற்றும் நடுத்தர ஆடை தொழில் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களின் திங்கள் சம்பளம், ஆயிரம் யுவானுக்கு மேலாகும். அவர்களில், சிலர், தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளாகவும், முக்கிய தொழில் நுட்ப வல்லுநர்களாகவும் மாறியுள்ளனர். சிலர், ஆடை தொழில் நிறுவனங்களை தாமாகவே நிறுவியுள்ளனர். இப்பள்ளி நிறுவப்பட்டது முதல், சுமார் 380 பேருக்கு கல்வி கட்டணம் குறைப்பு அல்லது விலக்கு வழங்கப்பட்டுள்ளன. மொத்தமாக ஒரு இலட்சத்து 40 ஆயிரம் யுவான் கல்வி கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அப்பள்ளியின் வளர்ச்சியையும், சமூகப் பயனையும் கண்டு, தமது இலட்சியம் மீது Tang Yue Hong அம்மையார் முழு நம்பிக்கை கொண்டுள்ளார். 2005ஆம் ஆண்டின் இறுதியில் அவர் முதலீடு செய்த 20 இலட்சம் நிதித்தொகையுடன், ஒரு ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய வேலைக்களரி, மாணவர்களின் விடுதி மற்றும் கிடங்கு கட்டியமைக்கப்பட்டன. தவிர, முன்னேறிய தொழில் நுட்ப கருவிகள் வாங்கப்பட்டன. தற்போது, இப்பள்ளி, பயிற்சி மற்றும் தயாரிப்பு தளமாக மாறியுள்ளது.
Tang Yue Hong அம்மையார் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றார். "ஆண்டுக்கு சுமார் 1000 பேருக்கு பயிற்சி அளிப்பது, ஆடை தயாரிப்பு தளத்தில் ஆண்டுக்கு 3 இலட்சம் ஆடைகளை தயாரித்து, ஏற்றுமதி செய்வது, ஆண்டு வருமானமாக ஒரு கோடி யுவானை எட்டுவது, 6 இலட்சம் யுவான் வரித்தொகையை செலுத்துவது" என்ற குறிக்கோளை அவர் திட்டமிட்டுள்ளார். இக்குறிக்கோளை நனவாக்க, அவர் முயற்சி மேற்கொண்டு வருகின்றார்.