மார்ச் திங்கள் 14ம் நாள் லாசா வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், புதிய வாழ்க்கையை மீட்கும் வகையில், அண்மையில், திபெத் தன்னாட்சி பிரதேச அரசு மற்றும் பல்வேறு துறைகள் பொது மக்களுக்கு, பல்வேறு சேவைகளையும் பணத்தையும் பொருட்களையும் உதவியாக வழங்கியது.
இதுவரை, திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசின் நிதித் துறை, இந்த வன்செயல்களுக்கு இலக்காகி மரணமடைந்தோரின் குடும்பத்தினருக்கு 30 இலட்சம் யுனானை வழங்கியுள்ளது.
தவிர, திபெத்தின் பல்வேறு துறைகள், பாதிக்கப்பட்ட பலியானவருக்கு நித உதவி அளத்து வருகின்றன.
அரசின் உதவிக் கொள்கை மற்றும் சமூகத்தின் நிதானத்தால், லாசாவிலுள்ள சந்தைகள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. தற்போது, லாசாவில் 93 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தனியார் கடைகள், மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன.
|