சின்காய் திபெத் பீடபூமியில் தாவர வகைகள்
cri
அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் நூறு அறிவியலாளர்கள் சின்காய் திபெத் பீடபூமியிலுள்ள இயற்கை தாவர வகைகளை பரிசோதனை செய்து, சேகரிக்கவுள்ளனர். அந்த தாவரங்களின் புவிபடங்களும் வரையப்படும். சீன அறிவியல் கழகம் அண்மையில் இதை அறிவித்தது. சின்காய் திபெத் பீடபூமியிலுள்ள சிறப்பு உயிரின வாழ்க்கை சூழலில் இயற்கை தாவர வகைகள் மீது பன்முக பரிசோதனை பணி மேற்கொள்வது இது முதல் முறையாகும். இத் திட்டப்பணி மூலம், சின்காய் திபெத் பீடபூமியின் முழுமையான தாவர மூலவள பாதுகாப்பு தொகுதியை நிறுவி, வசதியான தரவு களஞ்சியத்தையும் தகவல்களை கூட்டாக அனுபவிக்கும் சேவையையும் சீனா அமைக்கும்.
|
|