திபெத்தில் 3 திங்கள் கால மிதி வண்டி பயணத்துக்குப் பின், திபெத் பற்றி மேலும் அறி்ந்து கொண்டுள்ளார் என்று பிரான்ஸ் தொழில் முனைவோர் Paul Dubrule கூறினார். நேற்று ஷாங்காய் மாநகரில் செய்தியாளருக்குப் பேட்டி அளித்த அவர் பேசுகையில், திபெத்தில் ஒரு முறை கூட சென்றடையாமல் திபெத் பற்றி விழல் பேசிய பிரான்ஸ் செய்தி ஊடகங்களை விட, தனக்கு கருத்து வெளிப்பாடு உரிமை அதிகம் என்று கூறினார். திபெத்துக்குச் செல்வதற்கு முன், பல மேலை நாட்டவர்களை போல், திபெத் அரசின் நிர்பந்தக்குள்ளாகியதாக கருதிருந்தார் என்றும் அவர் கூறினார். ஆனால், திபெத் பொருளாதாரத்தை வளர்ப்பதிலும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் நடுவண் அரசு முழு மூச்சுடன் ஈடுபடுவதை திபெத்தில் நேரில் கண்ட நிலைமைகள் காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸின் நிலைமையை ஒப்பிடுகையில், திபெத்தில் மக்களின் வாழ்க்கை நிலை செல்வம் அடையவில்லை. ஆனால், சமூக முன்னேற்றம் கொண்டு வரும் கனிகளை அவர்கள் அனுபவிக்கின்றனர் என்று தான் தெளிவாக உணர்ந்துள்ளதாக Paul Dubrule கூறினார்.
|