• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-20 18:33:10    
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் சீனர்களின் அமைதி பேரணி

cri
உள்ளூர் நேரப்படி 19ம் நாள், பாரிஸ், பெர்லின், இலண்டன், வாஷிண்டன், லோஸ் ஆன்சிலெஸ் முதலிய ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளின் நகரங்களில், சீனர்கள் பெரும் அளவிலான அமைதி பேரணி மற்றும் ஆர்பாட்டத்தை நடத்தினர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஆதரித்து, திபெத் சுதந்திரத்துக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அரசியலாக்குவதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலை நாட்டு செய்தி ஊடகங்கள் சீனா பற்றி திரித்துப்புரட்டி அறிவித்ததற்கு அவர்கள் கடும் மனநிறைவின்மையையும் தெரிவித்தனர். பாரிஸின் குடியரசு எனும் சதுக்கத்தில் சுமார் பத்தாயிரம் சீன மாணவர்களும், சீனர்களும், நட்பார்ந்த பிரான்ஸ் பிரமுகர்களும் பேரணி நடத்தினர். இது கடந்த 20 ஆண்டுகளில் பிரான்ஸில் நடத்தப்பட்ட மிகப் பெரிய சீனர் பேரணியாகும். ஜெர்மனியில் பல ஆயிரம் சீனர்கள் பெர்லினில் பெரும் அளவிலான ஆர்பாட்டத்தை நடத்தினர். அமெரிக்காவின் பல நகரங்களில் சீனர்கள் எதிர்ப்பு பேரணியை நடத்தி, அமெரிக்க மக்களுக்கு திபெத் பற்றிய உண்மை நிலைமையை பிரச்சாரம் செய்தனர். லோஸ் ஆன்சிலெஸ் நகரில் பல ஆயிரம் சீனர்கள் CNN க்கு எதிர்ப்பு தெரிவித்து, Jack Cafferty சீன மக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினர். மேலும் பிரிட்டனில் சில நகரங்களில் சீனர்கள் மேலை நாட்டு செய்தி ஊடகங்களின் சீனா பற்றிய தவறான செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேரணியை நடத்தினர்.