மலேசியாவின் உள்ளூர் நேரப் படி இன்று விடியற்காலை, பெய்சிங் ஒலிம்பிக் தீபம் ஏற்றிச்சென்ற சிறப்பு விமானம், மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் சென்றடைந்தது. வெளிநாடுகளில் தீபத் தொடரோட்டத்தின் 13வது பகுதி, இந்நகரில் நடைபெறும்.
கோலாலம்பூரின் சர்வதேச விமான நிலையத்தில், மலேசியாவின் தொடர்புடைய வாரியங்கள் வரவேற்பு விழாவை நடத்தின. மலேசியாவிலுள்ள சீனத் தூதர் செங்யுங்ஹுவ, கோலாலம்பூர் நகரின் தலைவர் ஹஜிம் போர்ஹன் முதலியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இத்தீபத் தொடரோட்டம் 21ம் நாள் நடைபெறும். இதன் முழு நிளம் 13.7 கிலோமீட்டர். மொத்தம் 80 தீபம் ஏந்தும் நபர்கள் இத்தொடரோட்ட நடவடிக்கையில் பங்கெடுப்பர்.
திட்டப்பபடி, பெய்சிங் ஒலிம்பிக் தீபம், 21ம் நாள் கோலாலம்பூரை விட்டு புறப்பட்டு, இந்தோனேசியத் தலைநகரான ஜகார்த்தாவுக்குச் சென்றும்.
|