• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-21 17:21:33    
பொது மக்களின் பண்பாட்டு வாழ்க்கை

cri

இலவச அறிவுரைகளை முக்கியமாகக் கொண்ட கீழை அரங்கு என்ற நடவடிக்கையில் பங்கெடுக்க, அறிவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் சமூக நல நிறுவனங்களுடன் இணைந்து சாங்காய் அரசு அழைப்பு விடுத்தது.

 

இந்த அறிவுரைகள், சமூகக் கல்வியை முக்கியமாகக் கொண்டவை. சீனா மற்றும் சாங்காய் மாநகரத்தின் நிலைமை, சமூகம் மற்றும் தனி மனித வளர்ச்சி ஆகியவை இந்த அரங்கின் முக்கிய பகுதியாகும். பணிப் பிரச்சினைகளை தீர்க்கும் அறிவரைகளையும் இந்த அரங்கில் கிடைக்கலாம். கல்வியல், தலைசிறந்த கலை பற்றிய அறிவுரைகளை வழங்கும் வகையில், உள் நாடு மற்றும் வெளிநாடுகளின் புகழ் பெற்ற நிபுணர்களுக்கு சாங்காய் அரசு அழைப்பு விடுத்தது. முக்கிய ஆராய்ச்சிப் பிரச்சினைகள், கல்வியல் சித்தாந்தம் மற்றும் பண்பாட்டுக் கல்வியின் ஆராய்ச்சி குறித்து தொடர்பாக இவர்கள் ஆழ்ந்த விமர்சனம் வழங்குவர். மேற்கூறியவை இந்தக் கீழை அரங்கின் முக்கிய உள்ளடக்கங்களாகும்.

 

2004ம் ஆண்டு, ஜீன் திங்கள் முதல் இது வரை, ஏறக்குறைய 7 ஆயிரம் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 27 லட்சம் பேர் இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கீழை அரங்கு, சாங்காய் மாநகரத்தில் மிகப் புகழ் பெற்ற பொது நல நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

கடந்த சில ஆண்டுகளில், இணையம் விரைவாக வளர்ந்து வருகிறது. பொது மக்களுக்கு பொது பண்பாட்டுத் தொண்டு புரிவதற்கு, சாங்காய் மாநகரம் பல இணைய மையங்களை உருவாக்கியுள்ளது.

சாங்காய் மாநகரத்தின் பொது பண்பாட்டுச் சேவை அமைப்புமுறையின் கட்டுமானக் கோரிக்கைபடி, குடியிருப்புப் பகுதியின் இணைய மையத்தின் அடிப்படைச் சேவைகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படுகின்றன. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பது, அடிப்படைப் பயிற்சி ஆகியவை இலவசமானவை.

நண்பர்களே, பொது மக்களின் பண்பாட்டு வாழ்க்கை என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.