வியட்நாம் தலைமை அமைச்சரின் கோரிக்கை
cri
Ho Chi Minh நகரில் நடைபெறவுள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் பாதுகாப்பை முழுமையாக உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று வியட்நாம் தலைமை அமைச்சர் Nguyen Tan Dung நேற்று வலியுறுத்தினார். ஹனோய் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். வியட்நாமில் சமூக நிலைமை நிதானமாக உள்ளது. இருந்தபோதிலும், எதிர்ப்பு சக்திகள் இந்த நிலைமையைச் சீர்குலைக்க முயல்கின்றன என்று அவர் கூறினார். விளையாட்டுகள், அமைதி ஆகியவற்றுக்கான வியட்நாம் மக்களின் பற்றுணர்வையும், வியட்நாம் சீன நட்புறவையும் வெளிப்படுத்தும் வகையில், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
|
|