உள்ளூர் நேரப்படி இன்று விடியற்காலையில், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய சிறப்பு விமானம், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தது.
இது, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் 14வது வெளிநாட்டு நகரமாகும். இரண்டரை மணி நேரம் நீடித்த இத்தொடரோட்டத்தில், 80 தீபம் ஏந்துபவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக தீபம் ஏந்தியவர், ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் பூப்பந்து விளையாட்டில் தங்கப் பதக்கம் பெற்ற Taufik Hidayat ஆவார்.
ஜகார்த்தாவிலுள்ள தொடரோட்டம் முடிந்த பின், ஆஸ்திரேலியத் தலைநகர் Canberra, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் அடுத்த நகரமாகும்
|