• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-22 15:29:24    
புத்தாயிரம் ஆண்டு சீன நினைவகம்

cri

புத்தாயிரம் ஆண்டு சீன நினைவகம், பெய்ஜிங் மேற்கு Chang An வீதியில் அமைந்துள்ளது. அது, சீன இராணுவ அருங்காட்சியகத்துக்கும் சீன தொலைக்காட்சி நிலையத்துக்கும் இடையில் இருக்கிறது. அதன் தெற்குப் பகுதி, பெய்ஜிங் மேற்கு தொடர் வண்டி நிலையத்தை நோக்கி அமைந்துள்ளது. அதன் பரப்பளவு, 4.5 ஹெக்டராகும்.

இந்நினைவகம், தெற்கு திசையை நோக்கியதாய் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு வாயிலில் 9 மீட்டர் நீளமான, 1.05 மீட்டர் உயரமான வெள்ளைக் நினைவு கல் சின்னம் ஒன்று நிற்கிறது. அதன் எடை 34.6 டன்னாகும். சீனாவின் முன்னாள் அரசுத் தலைவர் ச்சியான் ச்சே மின் இயற்றிய புத்தாயிரம் ஆண்டு சீன நினைவகம் என்ற 5 சீன எழுத்துக்கள் அதில் காணப்படுகின்றன. இது, உலகில், மிகப் பெரிய வெள்ளைஜேடாகும்.

இந்நினைவுச் சின்னத்தின் வடக்குப் பகுதியில், ஒரு சதுக்கம் உள்ளது. அது நில மட்டத்திலிருந்து 1 மீட்டர் தாழ்வாக இருக்கிறது. அதன் ஆரம், 17.5 மீட்டராகும். இச்சதுக்கத்தின் நடுவில், ஒரு செங்கோன வடிவமான புனிதத் தீப மேடை இருக்கிறது. அங்கு, ஒரு அணையாத தீபம் காட்சியளிக்கிறது. சீனாவின் பண்பாடு, தீயிலிருந்து வருவதாக இது பொருள்படுத்துகிறது. சீனத் தேசிய பண்பாட்டு புத்தாக்கம், அணையாதது என்று அது சுட்டிக்காட்டுகின்றது.

இச்சதுக்கத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில், உள்ள வாய்க்கால் போன்ற அமைப்பில் நீர் ஓடுகின்றது. அவை, சீனாவின் தாய் ஆறுகளான யாஞ்சி மற்றும் மஞ்சள் ஆற்றைக் குறிக்கின்றன.

இத்தீப மேடையின் வடக்கில், 270 மீட்டர் நீளமான, 15 அகலமான பாதை ஒன்று இருக்கிறது. இப்பாதையின் நடுவில், 3 மீட்டர் அகலமான வெண்கலப் பாதை உள்ளது. அதில், கி.மு. 3000ம் ஆண்டு முதல், கி.பி. 2000ம் ஆண்டு வரையான 5000 ஆண்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. அவை, சீனத் தேசியத்தின் 5000 ஆண்டுகால வரலாற்றைக் காட்டுகின்றன.