• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-22 09:20:18    
நிகழ்ச்சிகளை கேட்ட பின் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள்

cri

கலை:  தமிழகத்தில் கோடையின் வருகையை அன்றாட வெயிலின் தீவிரம் உணர்த்திக்கொண்டிருக்கும் என்று நினைக்கிறோம்.
க்ளீட்டஸ்: இங்கே குளிர் நீங்கி வசந்தகாலத்தின் எழில் கொஞ்சும் காட்சிகள் பெய்சிங்கை அழகுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
கலை: வெயிலோ, மழையோ, குளிரோ. தவறாமல் எமது நிகழ்ச்சிகளை கேட்டு கடிதங்கள், மின்னஞ்சல்கள் வாயிலாக கருத்துக்களை எழுதி ஆதரவளிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகூறி நிகழ்ச்சிக்குள் செல்கிறோம்.
க்ளீட்டஸ்: 14 வயது பள்ளி மாணவர் இலங்கை காத்தான்குடி ஏ.சி.ஏ.மின்ஹால் எழுதிய கடிதம். அறிவை அமுதமாக்கி வழங்கும் உங்களது நிகழ்ச்சிகளை கேட்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களுடனான எனது நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும் என் போன்றோருக்கும் சீனாவை பற்றி அரிய தகவல்களை அள்ளித்தரும் சீன வானொலிக்கு நன்றிகள்.


கலை: அடுத்து சத்திரப்பட்டி பா. கதிரவன் எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சியில் சீனாவில் சந்திர நாட்காட்டியில் விலங்குகளின் பெயர்களை ஆண்டுகளுக்கு சூட்டியுள்ளதையும், எலி, டிராகன் உள்ளிட்ட 12 விலங்குகள் அவற்றில் இடம்பெறுவதையும் அறிந்தேன். 2008ம் ஆண்டு எலி ஆண்டு என்ற தகவலும் தெரிந்துகொண்டேன்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து வெண்ணந்தூர் எஸ். சுப்ரமணி எழுதிய கடிதம். நாள்தோறும் இடம்பெறும் நமது நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்கிறோம். குறிப்பாக மக்கள் சீனம், சீன வரலாற்றுச் சுவடுகள், தமிழ் மூலம் சீனம், சீனாவில் இன்பப் பயணம் ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும் சேர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
கலை: அடுத்து நேருக்கு நேர் நிகழ்ச்சி குறித்து குருணிகுளத்துப்பட்டி சொ. முருகன் எழுதிய கடிதம். நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அகில இந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் திரு செல்வம் அளித்த பேட்டியை கேட்டேன். அவர் சீன வானொலியை எப்போது கேட்க ஆரம்பித்தார், கல்வி, பணி மற்றும் குடும்பச்சூழல் இவற்றுக்கிடையில் அவர் சீன வானொலியை மட்டும் எப்படி கேட்டு வருகிறார் என்பதையெல்லாம் அறிய முடிந்தது. அவர் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை மட்டுமே கேட்பது, சீன வானொலியின் சிறப்பை அறியச் செய்தது.


க்ளீட்டஸ்: தொடர்ந்து நீலகிரி கீழ்குந்தா கே. கே. போஜன் எழுதிய கடிதம். அரசாங்கம் சுகாதாரத்திற்காக எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் உள்ள நீரில் உற்பத்தியாகும் கொசுக்களின் மூலம் பரவும் நோய்கள் பற்றி அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் அறிய முடிந்தது. அசுர வேகத்தில் இனப்பெருக்கம் செய்யும் கொசுக்கள் நமது நரம்பு, மூட்டு, தோல் ஆகியவற்றை பாதிக்கும் நோய்களுக்கு உடந்தையாக இருப்பதை அறிந்தோம். முன்பெல்லாம் இத்தகைய நோய் யாருக்காவது ஏற்பட்டால் ஊரில் உள்ள மற்றவர்கள் ஊரையே காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு சென்று விடுவார்கள் என்று கேள்விபட்டதுண்டு. ஆனால் அறிவியல் முன்னேறிய இக்காலத்திலும் ஏதாவது ஒரு நோய் தோன்றி மிரட்டிக்கொண்டுதான் இருக்கிறது என்பது உண்மையே.


மின்னஞ்சல் பகுதி
பாண்டிச்சேரி, என். பாலகுமார்
இந்திய-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை பற்றி விரிவான தகவல்கள் செய்தித் தொகுப்பில் இடம்பெற்றன. இந்தியாவும் ஆப்பிரிக்கவும் நீண்டகால வரலாறு தொடர்பு கொண்டவை. அந்த வகையில் இந்த உச்சி மாநாட்டின் மூலம் கல்வி, அடிப்படை வசதிக் கட்டுமானம் அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளின் ஒத்துழைப்பு அதிகரிக்க ஒப்பந்தமிடப்பட்டு இருப்பதை அறிந்தேன். ஆப்பிரிக்காவிலுள்ள செழுமையான இயற்கை மூலவளம் மற்றும் எரியாற்றல் பாதுகாப்புக்கான இந்தியாவின் எதிர்கால தேவையை உத்தரவாதம் செய்யும் என்று இந்தியா நம்புகிறது. இதன் மூலம் இந்தியாவின் எதிர்காலம் ஆப்பிரிக்காவின் கையில் இருப்பதையும், ஆப்பிரிக்காவின் மற்ற துறைகளின் வளர்ச்சி இந்தியாவின் கையில் இருப்பதையும் உணர்ந்து கொண்டேன்.


சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
நாள்தோறும் செய்தி அறிக்கையின் போது ஒலிம்பிக் சிறப்பு செய்திகள் இடம்பெறுகின்றன. இவற்றை கேட்கும்போது பெய்ஜிங் ஒலிம்பிக்போட்டி நடைபெறும் பொன்னான நாள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. ஒலிம்பிக் செய்திகள் சிறப்பாக அமைகின்றன. பாராட்டுக்கள்.
……வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்……
மார்ச் திங்கள் 27 ஆம் நாள் இடம்பெற்ற •அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் •பெற்றோர்களின் வேலை வாய்ப்பால் அவர்களைப் பிரிந்துள்ளவர்களின் எதிர்கால வாழ்க்கை என்ற கட்டுரை மிகவும் சிறப்பான முறையில் இருந்தது. காரணம், இதுவரை அறிந்திராத தகவல்களை உள்ளடக்கிய தலைப்பு. பல்வேறு சொந்த காரணங்களால், பிள்ளைகளை பிரிந்து வாழ வேண்டிய நிர்பந்தம் சில பெற்றோர்களுக்கு ஏற்படுகின்றது. அந்த நிலையில், இயல்பாகவே, தத்தமது பணிகளில் பெற்றோர்களால் நாட்டம் கொள்ள இயலாது. அன்றி, வீட்டில் உள்ள முதியவர்களின் கண்காணிப்பில், குழந்தைகள் சீக்கிரமாக கெட்டுப் போகவும் வாய்ப்புக்கள் அதிகம். இந்தப் பிரச்னையை அடியோடு தவிர்ப்பதற்காக, அன்ஹொய் மாநிலத்தில் உள்ள சாங்ஹாங் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட விரிவான முயற்சிகளை நான் மனதார பாராட்டுகின்றேன். விடுதியில் தங்க வைக்கும் வழிமுறை மூலம், மாணவர்களின் மதிப்பெண்கள் முன்பை விட அதிகமாகக் கூடியிருப்பதற்காக மனம் மகிழ்கின்றேன்.