• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-22 10:05:29    
தலாய்லாமாவின் வீண் முயற்சி

cri
கடந்த சில நாட்களில் மேலை நாடுகளில் வாழ்கின்ற சிலரை சந்தித்து சீனாவை எதிர்க்க முயற்சி செய்த போது தலாய்லாமா பல இடங்களுகுச் சென்று பிரச்சாரம் செய்ய துவங்கினார். இது குறித்து சீன மக்கள் நாளேடு திபெத் சுதந்திர கனவை நனவாக்காது என்ற தலைப்பில் இன்று கட்டுரையை வெளியிட்டது. சிலர் தலாய்லாமா குழுவை பயன்படுத்தி சீனா மீதான நிர்பந்தத்தை அதிகரிக்க முயன்றுள்ளனர். தலாய்லாமா குழுவும் அவர்களைப் பயன்படுத்தி திபெத் சுந்திரத்தை பரவல் செய்து திபெத் பிரச்சினையை சர்வதேசமயமாக்க முயன்றுள்ளது. அதன் மூலம் சீன நடுவண் அரசுக்கு நிர்பந்தம் திணிக்க முயன்றுள்ளது என்று கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை எந்த நாடுகளும் கூறப்படும் திபெத் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை தலாயாலாமா குழு நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச சமூகத்தின் ஆதரவு மூலம் கூறப்படும் திபெத் சுந்திரத்தை நிறைவேற்றுவதை சீன மக்கள் அனுமதிக்காது. சர்வதேச சமூகமும் இதை ஏற்றுக் கொள்ளாது. ஏனென்றால் திபெத் பிரச்சினை அரசுரிமை பிரச்சினையாகும். அதை பற்றி விவாதிக்கும் வாய்ப்பு இல்லை. மார்ச் 14 வென்செயல்கள் ஏற்பட்ட பின் சீன மக்களிடம் காணப்பட்ட ஒற்றுமையையும் பிரிவினையை எதிர்க்கும் கடல்கடந்த சீனர்களின் மன உறுதியை பார்த்தால் தலாய்லாமாவுக்கு சர்வதேச ரீதியான பிரச்சாரத்தை கொண்டு திபெத் சுதந்திர கனவை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்காது என்று கட்டுரை குறிப்பிடுகின்றது.