பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் இன்று இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நகரம், வெளிநாட்டிலான பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் 14வது நிலையமாகும். இந்நகரிலான விளையாட்டு அரங்கின் கிழக்கு சதுக்கத்திலிருந்து துவங்கிய தீபத் தொடரோட்டம் 7 கிலோமீட்டர் தொலைவு கடந்து, இரண்டரை மணிநேரம் நீடித்தது. மொத்தம் 80 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர். இறுதியாக தீபம் ஏந்தியவர், ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் பூப்பந்து விளையாட்டில் தங்கப் பதக்கம் பெற்ற Taufik Hidayat ஆவார்.

Taufik Hidayat
ஜகார்த்தாவிலான தொடரோட்டம் முடிந்ததை தொடர்ந்து ஒலிம்பிக் தீபம், ஆஸ்திரேலிய தலைநகரான Canberraவுக்கு செல்லும்.
|