• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-23 19:18:48    
YU ZHONG பிரதேசத்தில் மக்களின் இன்ப வாழ்க்கை

cri
YU ZHONG பிரதேசம், சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள CHONG QING மாநகரின் மையப் பகுதியாகும். உயர்வான கட்டிடங்களும் அதிக மக்களும் நிறைந்து காணப்படும் இப்பிரதேசம் பரப்பரப்பாக காட்சி தருகிறது. பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியினால், அங்குள்ள மக்கள் இன்பமான வாழ்க்கை நடத்துகின்றனர். ஒரு நாள் மட்டுமே அங்கே தங்கினாலும், நீங்கள் எண்ணற்ற முறையில் மனம் உருகிப் போய்விடுவீர்கள்.

காலை எட்டரை மணி, DA XI GOU குடியிருப்புப் பகுதியின் மருத்துவச் சேவை மையத்தில், மருத்துவர்களும் செவிலியரும் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கினர். LIU LU XIA அம்மையார் அங்குள்ள மருத்துவர்களில் ஒருவர். சளி நோய், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு அவர் சிகிச்சை வழங்குகிறார். ஆனால், குடியிருப்புப் பகுதியிலுள்ள மக்களுடன் அதிகமாக பழகுவதால், குடியிருப்பு மருத்துவ சிகிச்சை சேவை அவர்களுக்குக் கொண்டு வந்துள்ள பயன்களை அவர் நேரில் கண்டு உணர்ந்துள்ளார்.

"கடுமையற்ற நோய்வாய்ப்பட்டு இங்கே சிகிச்சை பெற்றால், மருத்துவ சிகிச்சை கட்டணத்தையும் போக்குவரத்து செலவையும் சிக்கனப்படுத்தலாம். அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வாழும் மக்கள் இங்கேயே சிகிச்சை பெற விரும்புகின்றனர். அன்றாட நாட்களில் அடிக்கடி அவர்களுடன் பழகி, பரிச்சயமானவராக மாறியுள்ளோம். இங்கே இருப்பது சொந்த வீட்டில் இருப்பதை போல் தாம் உணர்வதாக" LIU LU XIA அம்மையார் கூறினார்.

உண்மையாகவே நன்மைகளைப் பெற்றவர்கள், சுற்றுப்புறத்தில் வாழும் பொது மக்கள் தான். சளி நோய்வாய்ப்பட்டு அம்மையத்தில் குளுக்கோஸ் செலுத்தப்பட்டு கொண்டிருந்த திரு LI பேசுகையில், குடியிருப்புப் பகுதியின் மருத்துவச் சேவை மையம் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கிறது. மருத்துவ சிகிச்சை கட்டணம் நியாயமான முறையிலும், சேவை தரம் உயர் நிலையிலும் உள்ளன என்று கூறினார்.

QIN XIAO LAN அம்மையாரின் குடும்பப் பொருளாதார நிலை மோசமானது. மேலும், அவர் ஊனமுற்றவர் ஆவார். ஒவ்வொரு முறையும் மருத்துவ சிகிச்சைப் பெற குடியிருப்புப் பகுதியின் மருத்துவச் சேவை மையத்துக்குச் செல்லும் போது, YU ZHONG பிரதேசத்தின் நகர மருத்துவ சிகிச்சை உதவிச் சான்றிதழை அவர் கொண்டு செல்கிறார். 2005ஆம் ஆண்டிலிருந்து, ஆண்டுக்கு 500 யுவானை வாழ்க்கையில் வசதியற்றவருக்கு மருத்துவ உதவித் தொகையாக YU ZHONG பிரதேசம் வழங்குகிறது. இவ்வுதவித் தொகை பச்சை நிற சான்றிதழில் பதிக்கப்படுகிறது. அச்சான்றிதழைக் கொண்டவர் மேலும் மலிவான விலையில் மருந்துகளை வாங்கலாம். QIN XIAO LAN அம்மையார் கூறியதாவது—

"மருந்து விலை குறைந்தது மூன்றில் ஒரு பகுதி மலிவாக வழங்கப்படுகிறது. மருத்துவர்கள் எனது வீட்டுக்கு வந்து சேவை வழங்கியுள்ளனர். சேவை தரம் நன்றாக உள்ளது. மருத்துவ சிகிச்சை சேவை வேண்டுமானால், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பின், மருத்துவர் வருகிறார். நோயாளிக்கு பொறுமையுடன் சிகிச்சை வழங்குகிறார்." என்றார் அவர்.

பொது மக்கள் மேலும் வசதியாக மருத்துவச் சிகிச்சைப் பெறச் செய்யும் வகையில், எதிர்காலத்தில், YU ZHONG பிரதேசம் மேலும் அதிகமான இத்தகைய மருத்துவச் சேவை மையங்களை நிறுவும் என்று தெரிய வந்துள்ளது.

காலை 11 மணிக்கு, 52 வயதான ZHANG ZHENG DE, பாடல் பயிற்சி செய்யத் துவங்கினார். குடியிருப்புப் பகுதியின் பிரதிநிதியான அவர், பிரதேசத்தின் பாடல் அரங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் ஆடை தயாரிப்பு ஆலையிலிருந்து வேலையிழந்த போது, அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை.

ZHANG ZHENG DE வேலையிழந்ததால், அவரது குடும்பம், வேலை வாய்ப்பு இல்லாத குடும்பமாக மாறியது. கடந்த சில ஆண்டுகளில், தாம் எத்தனை தற்காலிக வேலைகளை செய்தார் என்பதை கூட அவரால் தெளிவாக நினைத்துப் பார்க்க முடியவில்லை.

கடந்த ஆண்டில், இன்னல் மிகுந்த ZHANG ZHENG DEயின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவர் வாழும் குடியிருப்புப் பகுதியின் பணியாளர்கள் அவரது நிலையை அறிந்த பின், குடியிருப்புப் பகுதியில் காவலர் பணியை அவருக்கு வழங்கினர். அது பற்றி ZHANG ZHENG DE கூறியதாவது—

"குடியிருப்புப் பகுதியின் உதவியைச் சார்ந்து தான் நான் வேலை வாய்ப்பு பெற்றேன். தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். ஒவ்வொரு திங்களும் ஊதியம் பெறுவதால், வாழ்க்கைக்கான உத்தரவாதம் கிடைக்கிறது. வாழ்க்கை நிலையும் சீராகியுள்ளது." என்றார் அவர்.

YU ZHONG பிரதேசம் அங்கு வாழ்கின்ற மக்களுக்கு நல்ல சூழலை உருவாக்கியுள்ளது. அங்கே, குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கல்வி பயில்கின்றனர். வயதுக்கு வந்தவர்கள் உற்சாகத்துடன் வேலை செய்கின்றனர். முதியோர்கள் இன்பமாக வாழ்க்கை நடத்துகின்றனர். தற்போதைய நிலைமையைப் பேணிக்காக்கும் அதே வேளை, மேலும் அருமையான வாழ்க்கைக்காக அவர்கள் அனைவரும் பாடுபட்டு வருகின்றனர்.