பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரான பாங்காங்
cri
பாங்காங், தாய்லாந்தின் தலைநகரமாகும். இது மே கோங் ஆற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கல்வி, போக்குவரத்து ஆகியவற்றின் மையமும் தாய்லாந்தில் மிகப்பெரிய நகரமும் இதுவாகும். அதன் மக்கள் தொகை 80 இலட்சமாகும். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம், 19ம் நாள் பாங்காங் சென்றடைந்தது.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, பெய்சிங் காற்று தர பிரச்சினையில் சமூகத்தின் பல்வேறு வட்டாரங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது காற்று தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், பெய்சிங் மாநகரம் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெய்சிங் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கண்காணிப்பு மையத்தின் புதிய
புள்ளிவிபரங்களின் படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், பெய்சிங் காற்று தர வரையறையை எட்டிய நாட்களின் எண்ணிக்கை 67 ஆகும். கடந்த 9 ஆண்டுகளில் இருந்ததில் இதுவே தலைசிறந்த நிலையாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு வசதியான சூழலை வழங்கும் வகையில், பெய்சிங் காற்று தரத்தை மேம்படுத்தும் வாக்குறுதிகளை சீனா நனவாக்க வேண்டும் என்று பெய்சிங் சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரி
ஒருவர் தெரிவித்தார். பெய்சிங்கிற்கு வந்த 6 ஆண்டுகளுக்குள், அதன் காற்று தரத்தின் மாற்றத்தை உணர்ந்து கொண்ட சீன மக்கள் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கும் தென் கொரிய மாணவி Sun Chunhua செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது இவ்வாறு கூறினார். தற்போது, பெய்சிங் காற்று தரம் மேன்மேலும் நன்றாக உள்ளது வசந்தகாலத்தில், காற்று மணல் வாநிலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. அன்றியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீதான மக்களின் கருத்துகள் பொதுவாக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
2001ம் ஆண்டில், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஏற்று நடத்த விண்ணப்பித்த போது, சீனா அளித்த வாகுறுதிகள் என்பது பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் காற்று தரம் தேசிய மற்றும் உலக சுகாதார அமைப்பின் வரையறையை எட்டுவதாகும். கடந்த 7 ஆண்டுகளில், பெய்சிங் காற்று தரம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. காற்று தரத்தை மேம்படுத்தும் வகையில், பெய்சிங் அதிகப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது அதற்கான முக்கிய காரணமாகும்.
|
|