• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-23 09:22:40    
அமிழ்தா நச்சா?  

cri

வூ என்ற நாட்டைச் சேர்ந்தவன் வெய் போயாங். செல்லவச் செழிப்பில் மேன்மையான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வெய் போயாங்கின் ஆர்வமெல்லாம் தாவ் இயல் கலைகளில்தான்.
தாவ் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட வெய் போயாங் தனக்கும் கீழ் சில சீடர்களையும் கொண்டிருந்தான். ஒரு முறை வெய் போயாங் தன் சீடர் மூவரை அழைத்துக்கொண்டு மலைப்பகுதிக்குச் சென்றான். அவன் அங்கு செல்ல காரணம், இறவாத வாழ்க்கைக்கு வழிசெய்யும் அமிழ்தை தயாரிக்கவேண்டும் என்பதே. திட்டமிட்டபடி, வெய் போயாங் இறவாத வரம் தரும் அமிழ்தை தயாரித்தும் முடித்தான். ஆனால், இந்த அமிழ்தை உன்ணும் தகுதி தன் சீடர்களுக்கு இருக்கிறதா என்பதில் கொஞ்சம் ஐயம் அவனுக்கு. உலக இச்சைகளில் மலம் லயித்த தன் சீடர்கள் இன்னும் அவற்றை மனதிலிருந்து நீக்காதிருப்பின், அந்த இச்சைகளிலிருந்து தங்களையே விடுவித்துக்கொள்ளாதிருப்பின், இறவாத வரம் எப்படி கிட்டும். எனவே தன் சீடர்களை பரிசோதிக்க முடிவு செய்தான் வெய் போயாங்.
"நம்மிடம் இப்போது இறவா மருந்தான அமிழ்து இருக்கிறது என்றாலும்,முதலில் நாம் நாய்க்கு கொடுத்து சோதனை செய்யவேண்டும். ஒருவேளை நாய், பறந்து சென்றுவிட்டால்,இறவா மருந்து ஆற்றல்மிக்கது, மனிதர்களாகிய நாமும் உண்ணலாம். ஒருவேளை நாய் இறந்து போனால், நாம் அதை பருகுவதால் பயனில்லை"என்று தன் சீடர்களிடம் கூறினான் வெய் போயாங்.


அதற்கு பின் நாய்க்கு அந்த அமிழ்தத்தை கொடுத்ததும், நாய் இறந்தது. உடனே தன் சீடர்களிடம் " நம்முடைய இலக்கு, இறவா வாழ்வுக்கு மருந்தான அமிழ்தை பெறுவதே. இப்போது நம்மிடம் அது இருக்கிறது ஆனால் அதை உண்ட நாயோ இறந்துவிட்டது. நாம் இறவா வரம் பெற்றவர்களாகவேண்டும் என்பது கடவுளின் எண்ணம் இல்லை போலும் என்று நினைக்கிறேன். ஒருவேளை நாம் இதை உட்கொண்டால் நாயை போல் நாமும் இறந்து போவோம். என்ன செய்யலாம்?" என்று கேட்டான் வெய் போயாங்.
இதைக் கேட்ட சீடர்கள், நீங்கள் இதை முயற்சிக்கலாம் என்றா கூறுகிறீர்கள்? என்று வினவினர்.
அதற்கு வெய் போயாங், நான் இந்த உலகத்தை வெறுத்து, மறுத்து, குடும்பத்தை விட்டு பிரிந்து இந்த மலைக்கு வந்துவிட்டேன். உண்மையை நான் அடையாத நிலையில் எப்படி நான் என் முகத்தை மறுபடி அவர்கள் முன் கொண்டு காட்டுவது. எனவே, வாழ்வோ, சாவோ, நான் இந்த அமிழ்தை உண்ண போகிறேன்" என்று கூறி அமிழ்தை வாயில் வைத்தத சில நொடிகளில் இறந்து போனான்.
இதைக் கண்ட வெய் போயாங்கின் சீடர்கள் ஒருவர் மற்றவரை கிலியுடன் பார்த்தனர். அதில் இரண்டு பேர். "நாம் இந்த அமிழ்தை தயாரித்தது, இறவாத வரம் பெறத்தான். அதை உண்பதால் மரணம்தான் கிடைக்கும் என்றால், ஏன் உண்ணவேண்டும்?" என்று கூறினர். மூன்றாமவனோ, "நம் ஆசிரியர் ஒன்றும் சாதாரணமானவர் அல்ல. அவர் இந்த அமிழ்துக்காக மரணத்தை ஏற்றார் என்றால், அது நிச்சயம் ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் இருக்கும்" என்று கூறி, அமிழ்தை உட்கொண்டான். பின் அவனும் இறந்து போனான்.


எஞ்சிய இரண்டு சீடர்களும். "நாம் இந்த அமிழ்தை தயாரிக்கும் நோக்கம், இறவாத வரம் பெற வேண்டியே. அதை உண்பதால் மனிதர்களுக்கு மரணம்தான் என்றால், அதனால் நம்க்கென்ன பயன்? இந்த அமிழ்தத்தை ஒருவேளை நாம் உண்ணாதிருந்தால் மேலும் சில தசாப்தங்கள் உயிருடன் வாழலாமே" என்றனர். பின்னர் தம் ஆசிரியருக்கும், சக மாணவனுக்கும் சவப்பெட்டி செய்து கொண்டு வர மலையிலிருந்து கீழே இறங்கினர்.
அவர்கள் சென்றதும், இறந்ததாக கிடந்த வெய் போயாங் எழுந்து, கீழே இறந்து கிடந்த தன் சீடனுக்கும் நாய்க்கும் அமிழ்தத்தை கொடுத்தான். பின் முவரும் இறவாத வரம் பெற்றவர்களாயினர். மேலெழும்பிச் செல்வதற்கு முன், மலையேறி வந்த ஒரு மரம் வெட்டுவோனிடம், தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எழுதிய பிரியாவிடை கடித்தத்தை வெய் போயாங் கொடுத்தான். பின்னர் ஆசிரியருக்கும் தம் சக மாணவருக்கும் சவப்பெட்டி செய்யச் சென்ற அவனது இரண்டு சீடர்களும் உண்மையறிந்து, தங்கள் செயலுக்காக மனம் வருந்தினர். உலக இச்சையில் மனம் இலயித்தபடி, வேற்றுலக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டால் வெற்று கிட்டுமா என்ன. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் நிலை இதற்கு பொருந்தாது.