தலாய் குழுவின் சீர்க்குலை முயற்சி
cri
திபெத் மக்களின் அமைதியான வாழ்க்கையையும் பல்வேறு தேசிய இனங்களுக்கிடையிலான இணக்க உறவையும் தலாய் லாமா குழு சீர்குலைக்க முயல்கின்றது என்று குவாங் மிங் நாளேடு இன்று வெளியிட்ட கட்டுரையில் சுட்டிக்காட்டியது. அண்மையில், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தைச் சீர்குலைக்க திபெத் சுதந்திரவாதிகள் முயன்றனர். லாசா 3.14 சம்பவங்களை திட்டமிட்டதைப் போல, இதுவும் தலாய் லாமா குழுவின் சூழ்ச்சி என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பயன்படுத்தி, திபெத்தின் அமைதியையும் திபெத் மக்களின் அமைதியான வாழ்க்கையையும் சீர்குலைத்து, திபெத்தின் சுதந்திரத்தை நனவாக்குவது என்பதே இந்த சூழச்சியாகும் என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டியது.
|
|