வட கொரிய ஒலிம்பிக் குழு மற்றும் வட கொரிய தலைநகரான பியொங்யாங்கின் தொடர்புடைய வாரியங்களின் ஆக்கப்பூர்வ முயற்சியுடன், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத்தோடரோட்டம் பியொங்யாங்கில் நடைபெறுவதற்கான ஆயத்த பணிகள் அடிப்படையில் நிறைவேறியுள்ளன.
வட கொரிய விளையாட்டுத் துறை அதிகாரிகள், புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள், பல்வேறு வட்டாரத்தினர் உள்ளிட்ட 80 தீபம் ஏந்தும் நபர்கள் இத்தீபத் தொடரோட்ட நடவடிக்கையில் கலந்து கொள்வர்.
ஏப்ரல் 28ம் நாள், பியொங்யாங்கில் தீபத் தொடரோட்ட நடவடிக்கை நடைபெறவுள்ளது. தீபம், பியொங்யாங்கின் மைய பகுதியிருந்து துவங்கி, உள்ளூர் முக்கிய குடியிருப்பிடங்களை கடந்து, Kim Il-sung விளையாட்டு அரங்கு வரை செல்லும் என்று தெரிய வருகின்றது.
பியொங்யாங்கிற்கு ஒலிம்பிக் தீபம் வருவது, இதுவே முதல் முறையாகும்.
|