
Li Jiang ஆற்று இயற்கை காட்சி பிரதேசம், உலகளவில், மிக பெரிய, அழகான எரிமலை குழம்பு, மலைகள் மற்றும் ஆறுகளால், இணைக்கப்பட்ட சுற்றுலா பிரதேசமாகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, Li Jiang ஆறு, எவ்வளவோ அறிஞர்களையும் கவிஞர்களையும் தனது அழகால் மயக்கமுற செய்துள்ளது. புதிய பதிப்பான 20 யுவான் நோட்டுப் பணத்தின் பின் பக்கத்தில் Li Jiang ஆற்றின் ஒரு பகுதி படம் காணப்படுகிறது. Li Jiang ஆறு, சீனாவின் எழில் மிக்க ஆறுகளில் ஒன்றாகும். புகழ் பெற்ற Li Jiang ஆறு, gui lin இயற்கை காட்சி பிரதேசத்தின் முக்கிய இடமாகும். அது, தெற்கு சீனாவின் guang xi சுவான் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

இது, முத்து ஆற்று நீர்பரப்பு பகுதியைச் சேர்ந்ததாகும். Li Jiang ஆறு, உலகில், எழில் மிக்க இயற்கைக்காட்சிப் பிரதேசங்களில் ஒன்றாகும். 160 கிலோமீட்டர் நீளம் கொண்ட அதன் இரு கரைகளில் உள்ள மலைகள், கம்பீரமானவை. அவை, பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. மலைச்சிகரங்களில் செடிகொடிகளும் மலர்களும் அடர்ந்து வளர்ந்துள்ளன. தொலைவிலிருந்து பார்த்தால், அது, அழகிய ஆடை போல் காட்சியளிக்கிறது.
நீண்டகால வரலாறு, வளமிக்க பண்பாடு, விநோதமான நிலவியல் அமைவு மிதமான கால நிலை ஆகிய காரணத்தால், 2007ம் ஆண்டு மே 8ம் நாள், சீனத் தேசியச் சுற்றுலாப் பணியகம், gui lin நகரின் Li Jiang ஆற்று இயற்கைக் காட்சிப் பிரதேசத்தைத் தேசிய ஐந்து A நிலை சுற்றுலா பிரதேசமென அங்கீகரித்துள்ளது.
|