• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-24 09:40:30    
மிகப்பழமையான ஒலிப்பதிவு

cri
மிகப்பழமையான ஒலிப்பதிவு

காயாத கானகத்தே என்றொரு தமிழ் திரைப்படப்பாடல் இருக்கிறது. இன்றைக்கு பலருக்கு இந்த பாடல் பற்றி தெரிந்திருக்காது. 1945அம் ஆண்டில் வெளிவந்த ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல், அந்த காலத்தில் இசைத்தட்டுகளில் இசைத்தாலாட்டாய் காற்றில் மிதந்தது. இசைத்தட்டை கண்டு பிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். 1857 ஆம் ஆண்டில் அவர் ஒலிப்பதிவும், ஒலி இசைக்கவும் செய்த ஃபோனோகிராஃப் என்ற கருவியை அதாவது இசைத்தட்டு கருவியை கண்டுபிடித்தார். ஆனால் உலகின் மிகப்பழமையான ஒலிப்பதிவு தாமஸ் ஆல்வா எடிசன் இசைத்தட்டு கருவியை கண்டுபிடிப்பதற்கு முன்னரே பதிவு செய்யப்பட்டுள்ளதாம். பிரான்ஸ் நாட்டு அறிவியலாளர் எடுவார்ட் லியோன் ஸ்காட் 1857 ஆம் ஆண்டில் ஃபோனாட்டோகிராஃப் எனும் கருவியை உருவாக்கினார். இந்த கருவியில் 1860 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட "ஆவ் கிளேர் தெ ல லூன், பியெரோ ரெப்பாண்டி" அதாவது நிலவின் ஒளியில் பியோரோ பதிலளித்தான் என்ற பிரெஞ்சு பாடலின் 10 வினாடி ஒலிப்பதிவுதான் தற்போதைக்கு மிகப் பழமையான ஒலிப்பதிவு என்று அமெரிக்க அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த ஃபோனாட்டோகிராஃப் கருவி மூலம் பதிவு செய்யப்பட்ட ஒலி எதில் பதிவாகியிருக்கிறது தெரியுமா? எண்ணெய் விளக்கின் திரியில் எழும் புகையால் பூசப்பட்ட தாளில். இதுதான் இசைத்தட்டுகளின் தாத்தா எனலாம்.

நிலவின் முதுகில் நிம்மதியாய்

மனிதர்கள் இறந்தால் ஒன்றேல் புதைக்கின்றனர் அல்லது எரிக்கின்றனர். எரியூட்டுவதால் எழும் புகை சுற்றுச்சூழலுக்கு திங்கிழைக்கிறது என்றால், புதைப்பதற்காக இடங்கள் இல்லாமல் கல்லறைகள் நிரம்பியிருப்பது மறுபுறம். சில நாடுகளில் மின்னடுப்பில் உடலை எரியூட்டி, எஞ்சும் சாம்பலை அதாவது அஸ்தியை அடுக்குகளாயுள்ள கல்லறைகளில் வைக்கும் வழமை உள்ளது. இது சுற்றுச்சூழலுக்கும் தீங்கிழைக்காது, இடப்பற்றாக்குறையையும் தீர்க்கும். இது இப்படியிருக்க கருவறையில் தொடங்கிய பயணம் கல்லறையில் முடியும் அல்லது அஸ்தி கரைக்கப்படும் கடலில் முடியும் என்ற நிலையை மாற்றி நிலவில் முடியும் என்றாக்க சில நிறுவனங்கள் முயன்று வருகின்றன. மக்கள் நிலவுக்கு பயணம் செல்ல ஏற்பாடு செய்வது போல, இறந்தவரின் அஸ்தியை நிலவில் கொண்டு சேர்க்கவும் ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அதற்காக ஒரு சொம்பு நிரைய கொண்டு செல்லமாட்டார்கள், சிறிதளவு அஸ்தியை நிலவுக்கு கொண்டு செல்ல 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமாம். அனேகமாக அடுத்த ஆண்டின் தொடக்கம் முதல் இந்த நிலவுத்திதி சேவை ஆரம்பமாகும் எனப்படுகிறது.