பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெற வேண்டுண் என்று விரும்புவதோடு, ஒலிம்பிக் விளையாட்டுக்கான செய்தி வெளியீட்டு பணியை கம்போடியா முழுமூச்சுடன் செவ்வனே செய்யும்.
பெய்சிங்கில் நடைபெற்ற சீன-ஆசியான் வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறை ஒத்துழைப்பு பற்றிய உயர் நிலை கூட்டத்தில் கலந்து கொண்ட கம்போடிய செய்தி அமைச்சகத்தைச் சேர்ந்த செய்தி ஒலி மற்றும் ஒளிபரப்புத் துறையின் தலைவர் Buth Bovuth, கம்போடியத் தேசிய வானொலி நிலையத்தின் துணைத் தலைவரான In Chhay ஆகியோர், நேற்று இவ்வாறு தெரிவித்தனர்.
சீன-கம்போடிய உறவு தலைமுறைகால நட்பாகும். இரு நாடுகளுக்கிடையில் மாபெரும் நட்புறவு உண்டு. ஆகையால், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, சீன மக்களுக்கு மட்டுமல்ல, கம்போடிய மக்களுக்கும் பெருமையானதாகும் என்று Buth Bovuth தெரிவித்தார்.
உண்மையான நவீனமயமாக்க மற்றும் செழுமையான பெய்சிங் மற்றும் சீன மக்களின் ஆர்வத்தை, கம்போடிய மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில், கம்போடியத் தேசிய வானொலி நிலையம், ஆக்கப்பூர்வமாக ஆயத்த பணியை மேற்கொள்வதோடு, தலைசிறந்த செய்தியாளர் குழுவை பெய்சிங்கிற்கு அனுப்பும் என்று In Chhay கூறினார்.
|