• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-25 14:41:48    
சீனாவின் புலாங் இனம்

cri

புலாங் இனம், சீனாவின் மிக பழைய சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றாகும். யுன்னான் மாநிலத்தின் xishuangbanna தைய் இனத் தன்னாட்சி சோ, linchuang பிரதேசம், lancang, mojiang முதலிய மாவட்டங்களில், புலாங் இன மக்கள் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை, 82 ஆயிரத்து 2 நூறாகும்.

புலாங் இனத்துக்கு சொந்த மொழி உண்டு. ஆனால் எழுத்துக்கள் இல்லை. இம்மொழி, தெற்காசிய மொழி குடும்பத்தின் wa de'ang கிளையைச் சேர்ந்தது. சிலர், ஹான், தைய், வா ஆகிய இன மொழிகளையும் பயன்படுத்துகின்றனர். புலாங் இனத்தின் இலக்கியம், வாய் மூல இலக்கியம் மட்டுமே. புராண கதைகள், செவிவழி கதைகள், காவியம், பழமொழிகள் ஆகியவை, இவ்விலக்கியத்தின் முக்கிய வடிவங்களாகும்.

புலாங் இன மக்களில் பெரும்பாலானோர், புத்த மதத்தின் ஹினயனாத்தை நம்புகின்றனர்.

புலாங் இன மக்கள், அதிகமாக வேளாண் துறையில் ஈடுபடுகின்றனர். முக்கியமாக மூன்று போகம் நெல் பயிரிடுகின்றனர். தேயிலை பயிரிடுவதால் புகழ் பெற்றுள்ளனர். புலாங் இன மக்கள் வசிக்கின்ற மலை பிரதேசங்கள், உலகில் புகழ் பெற்ற pu er தேயிலை விளையும் பிரதேசமாகும். தேநீ்ர், புலாங் மக்களின் விருப்ப பானமாகும். அவர்கள் தேயிலையைப் பதனிடுவதில் திறமைசாலிகள் ஆவர். மூங்கில் குழாய் தேநீர் வகைகளாகும், புளிப்பான தேநீரும் புலாங் இனத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த தேநீர்களாகும்.

புலாங் இனத்தின் பல பாரம்பரிய விழாக்கள், மத நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டன. புத்தாண்டு விழா, கிராமக் கடவுளை வழிபடும் விழா முதலியவை தனிச்சிறப்பு வாய்ந்த விழாக்களாகும்.

புலாங் இன மக்கள் திருமணம் செய்த பின், மனைவி குடும்பத்தினருடன் வாழ்வது வழக்கம். மனைவியும் கணவனும் இரு முறை திருமண விழா நடத்த வேண்டும். குழந்தை பெற்ற பின், மங்கள நாளில் இரண்டாம் திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டில் நடத்தப்பட வேண்டும். தவிரவும், இந்த விருந்து முதலாவதை விட பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் வழக்கமாகும்.