• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-09 13:15:35    
சீனாவின் புமி இனம்

cri

சீனாவின் புமி இனம், பண்டைகால சீனாவின் வடமேற்கு பகுதியிலான மேய்ச்சல் தேசிய இனத்தின் zhiqiang கிளையைச் சேர்ந்தது. புமி, என்றால் வெள்ளை நபர்கள் என்று பொருள்படுகிறது. அவர்கள், யுன்னான் lanping பைய் மற்றும் புமி இனத் தன்னாட்சி மாவட்டம், Lijiang நசி இனத் தன்னாட்சி மாவட்டம் முதலிய இடங்களில் வசிக்கின்றனர். இதன் மக்கள் தொகை, 29 ஆயிரத்து 7 நூறு ஆகும்.

தற்போதைய புமி இன மக்கள், சீன மொழியைப் பயன்படுத்துகின்றனர்.

அவர்கள், வேளாண்மை மற்றும் மேய்ச்சல் துறையில் ஈடுபடுகின்றனர். குடும்ப வடிவ கைத் தொழிலையும் நடத்துகின்றனர். தற்போது, அதன் அடிப்படையில், ஈயச் சுரங்கம், உப்பளம், இரும்பு தொழிற்சாலை முதலியவற்றை வளர்த்து, மின்சார நிலையத்தையும் கட்டியமைத்துள்ளனர்.

புமி இன மக்கள், சாப்பிடுவதைப் போல், நாள்தோறும் 3 முறை தேநீரைக் குடிக்கிறார்கள். பசுவின் கொம்புகளில் மதுபானத்தை வைத்து மூங்கில் குழாய்களால் உறிஞ்சி குடிக்கின்றனர். sulima என்ற மதுபானம், வாற்கோதுமையால் தயாரிக்கப்பட்ட இனிமையான மதுபானமாகும். இது, விருந்தினர்களையும் நண்பர்களையும் வரவேற்கும் முக்கிய அன்பளிப்புப் பொருளாகும்.

புமி இன மக்கள் பல கடவுள்களையும் மூதாதையார்களை வழிபடுகின்றனர். அவர்களின் விழாக்கள் பெரும்பாலும், வழிபாடு நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டவை. வசந்த விழா, இறந்தோர் நினைவு விழா, கோடைகாலத் தொடக்க விழா, படகு ஓட்ட போட்டி விழா, தீப விழா முதலியவை, அவர்களின் முக்கிய விழாக்களாகும்.

புமி இன மக்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படுகின்றது. மதுபானம், இறைச்சி ஆகிய இன்றியமையாத உணவுப்பொருட்களைத் தவிர, திருமணத்தின் போது பாடல்கள் பாட வேண்டும். விருந்தினர்கள் திரும்பிச் செல்லும் போது, கோழி கால், பன்றி இறைச்சி, தேயிலை, sulima மதுபானம் ஆகிய நான்கு பொருட்களை அன்பளிப்பாக வழங்க வேண்டும். இவை, உபசரிப்பவர் மதிப்புள்ள விருந்தினர்களுக்கு வழங்குகின்ற தலைசிறந்த அன்பளிப்புகளாகும்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040